தேவையானப் பொருட்கள் : வாழைப்பழம், ஊசி
செய்முறை:
ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த வாழைப்பழத்தை பார்வையாலேயே இரண்டாக வெட்டுவேன் என்று சொல்லுங்கள்.
பார்வையாளர்கள் பார்வையாலேயே நீங்கள் எப்படி வாழைப்பழத்தை இரண்டாக வெட்ட முடியும்? என்று
ஆச்சரியமாக கவனிப்பார்கள்! நீங்கள் வாழைப்பழத்தை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி
விரலில் பிடித்துக் கொண்டு, "" என் கண்களையே பாருங்கள். என் கண் இப்போது கத்தியாகி
இந்தப்பழத்தை வெட்டப்போகிறது. இதோ வெட்டி விட்டது.'' என்று சொல்லி விட்டு, வாழைப்பழத்தோலை
உரியுங்கள். தோலை உரித்ததுமே பழம் பாதியாக வெட்டப்பட்டு கீழே விழும்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பே வாழைப்பழத்தை மிக
நெருக்கமாக ஊசியால் சரியாக நடுப்பக்கத்தை சுற்றி குத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு
ஊசியால் குத்துவதால் உள்ளே இருக்கும் சுளை இரு பாகமாக வெட்டப்படும். தோலை
உரித்ததும் அது பாதியாக உடைந்து விழுந்து விடும். இது சீக்ரெட். இந்த மேஜிக்
செய்யும் போது பார்வையாளர்கள் உங்கள் கண்களையே பார்க்குமாறு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment