Wednesday, 19 February 2014

22 . சீட்டு கட்டில் சீக்ரெட் விளையாட்டு!





தேவையானப்பொருள்: 

 புதிய சீட்டு கட்டு ( பிளேயிங் கார்டு)

செய்முறை: 

 உங்கள் நண்பர்கள் முன்பு ஒரு புதிய சீட்டு கட்டை நன்றாக களைத்து, குலுக்குங்கள். பின்னர், அந்த சீட்டுக்கட்டை நண்பரிடம் கொடுத்து இதில் ஒரு சீட்டினை நினைத்துக்கொள். நீ நினைத்த சீட்டை சரியாக நான் சொல்கிறேன் என்று சொல்லுங்கள். உங்கள் நண்பர் சீட்டு கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்து அது என்ன வென்று பார்த்து திருப்பி அந்த சீட்டை கட்டில் மூடிவைத்துவிடுவார். 
நண்பரிடமிருந்து வாங்கிய சீட்டு கட்டை அவர் முன்பாகவே நன்றாக களைத்து குலுக்குங்கள். பின்னர், ஒவ்வொரு சீட்டாக கீழே வைத்து கொண்டே வாருங்கள். அப்படி வைத்துக்கொண்டே வரும் போது சட்டென்று ஒரு சீட்டை கீழே வையுங்கள். இது தான் நீங்கள் நினைத்த சீட்டு என்று கூறுங்கள். உங்கள் நண்பர் அந்த சீட்டை புரட்டிப் பார்த்து, தான் நினைத்த சீட்டு இதுதான் என்று ஆச்சரியப்பட்டுபோவார்.

மேஜிக் சீக்ரெட்:

இந்த மேஜிக் விளையாட்டில் புத்திசாலிதனம், தந்திரம்தான் முக்கியம். புதிய சீட்டுகட்டு என்பதால் சீட்டின் மேற்பரப்பு பளீச்சென்று இருக்கும். நண்பர் நினைத்து கொண்டு கொடுத்த சீட்டில் சீட்டின் ஓரத்தில் உங்கள் நகத்தால் அழுத்தமாக சிறுகுறி வைத்து விடுங்கள். அது யாருக்கும் சட்டென்று தெரியாது. பிறகு, சீட்டை குலுக்கி ஒவ்வொன்றாக கீழே வைத்துகொண்டே வரும் போது, அந்த நகக்குறி அடையாளத்தைக் கொண்டு அந்த சீட்டை இது தான் என்று காட்டுங்கள்!

இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த மேஜிக் செய்யும் போது சீட்டு வைக்கும் இடத்தில் கண்ணாடி கிளாஸ், கண்ணாடி பொருட்கள் எதாவது வைத்திருந்தால், நண்பர் சீட்டை திருப்பி பார்க்கும் போது அதன் பிம்பம் கண்ணாடி பொருள்களில் பிரதிபலிக்கும் அதை உற்று கவனித்தும் இந்த மேஜிக் செய்யலாம்!


No comments:

Post a Comment