44 . தண்ணீர் ஐஸ்
கட்டியாகும் மேஜிக்!
தேவையான பொருட்கள்:
காபி கப், ஸ்பான்ஞ், தண்ணீர், ஐஸ் கட்டி
செய்முறை:
ஒரு கப் எடுத்து பார்வையாளர்களிடம் காட்டுங்கள். பிறகு, அதை தலைகீழாக
கவிழ்த்துக் காட்டி, கப்பில் ஒன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்தவும். அடுத்ததாக, கப்பில் கொஞ்சம்
தண்ணீர் ஊற்றவும். கை விரலால் கலக்கவும்.
ஒரு சில விநாடிகள் கழித்து,
"இந்த கப்பில் ஊற்றிய தண்ணீர் மாயமாய் மறைத்து அதை
ஐஸ் கட்டியாக மாற்றிகாட்டுகிறேன்' என்று சொல்லிவிட்டு கப்பை தலைக்கீழாக கவிழ்க்கவும். கப்பில்
இருந்து தண்ணீர் கொட்டாது. பின்னர் கப்பை நிமிர்த்தினால் உள்ளே ஐ கட்டி இருக்கும்.
இதைக் கண்டு பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பாக கப்பில் கொஞ்சம் ஐஸ் கட்டியை வைத்து, அதன் மேல்
ஸ்பான்ஞ் வைத்து அழுத்தமாக திணித்துக்கொள்ள வேண்டும். கப்பை கவிழ்க்கும் போது
ஸ்பான்ஞ் கீழே விழாது. அடுத்து தண்ணீர் ஊற்றும் போது அந்தத் தண்ணீரை ஸ்பான்ஞ்
உறிஞ்சுவிடுவதால் கப்பில் தண்ணீர் இருக்காது. விரலால் கலக்கும் போது ஸ்பான்ஞ்
கொஞ்சம்விலக்கி விடவும். கப்பை கவிழ்க்கும் போது ஐஸ் கட்டி கீழே விழுந்து விடும்.
இந்த மேஜிக்கை கவனமாக செய்தால் நீங்களும் அசத்திக்காட்டலாம்!
No comments:
Post a Comment