Thursday 20 February 2014

39 . பறக்கும் காகித பலுõன்!





தேவையானப்பொருட்கள்:

 

பட்டர் சீட், மெல்லிய கம்பி, பசை, நுõல்கண்டு, தீப்பெட்டி, ரிப்பன் துணி


செய்முறை:


பட்டர் சீட்டை படத்தில் காட்டியவாறு வெட்டிக்கொள்ளவும். பிறகு பசை கொண்டு படத்தில் இருப்பது போல பலுõன் வடிவம் வருமாறு ஒட்டி, காயவிடவும்.


அடுத்து, கம்பியை எடுத்து வளைத்து குறுக்கும் நெடுக்குமாக இணைக்கவும். கம்பியின் மையப்பகுதியில் ரிப்பன் துணியை தீபந்தம் போல் சுருட்டவும்.

 

 இந்த வளைய செட்டப்பில் நீங்கள் செய்த பேப்பர் பலுõனை சுற்றி ஒட்டவும். ஈரம் காய்ந்தப்பின், நண்பரின் உதவியுடன், தீக்குச்சியால் தீப்பந்தத்தை கொளுத்துங்கள்.


இப்பொழுது பலுõன் உப்பலாக விரிவடையும், நன்றாக விரிந்தப்பின் பலுõனிலிருந்து கையை விட்டு விடுங்கள். பலுõன் மாயமாய் சர்ர் என்று மேலே சென்று பறக்கும்! பார்த்து ரசியுங்கள்!

மேஜிக் சீக்ரெட்:

 

காகித பலுõனின் வெற்றிடத்தில் தீ பந்தம் எரியும் போது, அது விரிவடைகிறது. 

விரியடையும் போது வெப்பம் கீழ்நோக்கி அழுத்தமாக வெளியேறும் போது பலுõன் மேல் நோக்கிச் செல்கிறது. 

தீ வெப்பம் முழுமையாக வெளியேறியதும் வெளிக்காற்று பலுõனில் உட் சென்று நிலையாக பறக்க வைக்கிறது.

No comments:

Post a Comment