Thursday, 20 February 2014

49 . தண்ணீரில் தெரியும் மேஜிக் ஸ்டார்!





தேவையான பொருட்கள்:


ஒரு சில்வர் தட்டு அல்லது கப், மிளகு துõள், கொஞ்சம் தண்ணீர், குளியல் சோப்

செய்முறை:

 

 சில்வர் தட்டில் கால் பகுதி தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் மிளகு துõள் ஒரு டீஸ்பூன் அளவு துõவ வேண்டும். இவ்வாறு செய்தப்பிறகு, நண்பர்களிடம், ""இப்போது பாருங்கள் இந்த தட்டின் தண்ணீர் மேல் பரப்பில் சட்டென்று ஒரு மேஜிக் ஸ்டார் வரும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் இருக்கும் சோப்பில் கை விரலை தேய்த்து விட்டு, அதே விரலால் தட்டில் இருக்கும் தண்ணீரில் நனைத்து விட்டு விரலை எடுத்து விடுங்கள். நீங்கள் விரலை எடுத்ததும், தட்டில் உள்ள தண்ணீர் பரப்பில் மாயமாய் ஒருஸ்டார் உருவாகி பின்பு களைவதைப் பார்க்கலாம். தண்ணீரில் மாயமாய் தோன்றி மறைந்த ஸ்டாரைப் பார்த்து நண்பர்கள் மகிழ்வார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
மிளகில் இருக்கும் வேதிப்பொருட்கள் சோப்புடன் சேரும்போது தண்ணீருக்கும் மிளகு துõளுக்கும் இடையே இருக்கும் ஒட்டும் தன்மை குறைத்து விடுகிறது. சோப்பில் இருக்கும் வேதிப்பொருள் தண்ணீரின் மேற்பரப்புடென்ஷனை தள்ளுகிறது இந்த தள்ளு விசையால் சோப்பை விட்டு மிளகுதுõள் தண்ணீர் பரப்பில் தத்தி ஓடுகிறது. தண்ணீர் தட்டில் வட்ட அமைப்பில் இருப்பதால் தண்ணீரின் மேற்பரப்பில் ஸ்டார் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.



No comments:

Post a Comment