Wednesday 19 February 2014

17 . சுவரில் ஒட்டும் பலுõன்!





தேவையானப்பொருட்கள் :
 
பலுõன், கம்பளி துணி அல்லது ரப்பர் துண்டு

செய்முறை:
 
முதலில் பலுõனை ஊதி அதனுள் காற்றை நிரப்பவும். பிறகு, நுõலினால் வாய் புறத்தை இறுக கட்டி விடவும். அதாவது காற்று வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவும்.இப்போது பார்வையாளர்களைப் பார்த்து,""இந்த மேஜிக் பலுõன் எந்த பிடிமானமும் இல்லாமல் சுவற்றில் ஒட்டி நிற்கும். பாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு, கம்பளி துணியால் பலுõன் மேல் புறத்தில் தேய்க்கவும். தேய்த்த கையோடு பலுõனை சுவற்றின் மீது வைத்து கொஞ்சம் அழுத்தி விட்டு, கையை எடுத்து விடவும். இப்போது பலுõன் சுவற்றில் அப்படியே நிற்பதை பார்த்து பார்ப்பவர்கள் ரசிப்பார்கள்.

மேஜிக் சீக்ரெட்: 

பலுõனை கம்பளி துணியால் தேய்க்கும் போது உராய்வு ஏற்படுகிறது. உராய்வினால் வெப்பம் ஏற்ப்டடு மின்னோட்டம் உருவாகி எலக்ட்ரான் ஈர்ப்பு சக்தி பெற்றுவிடுவதால் பலுõன் சுவற்றில் சிறிது நேரம் ஒட்டி நிற்கும். இந்த மேஜிக் செய்யும் போது பாலுõனில் எந்தப்பகுதியில் கம்பளி துணியால் தேய்த்தோமோ, அந்த பகுதி சுவரில் ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் பலுõன் சுவரில் ஒட்டாது.


No comments:

Post a Comment