Thursday, 20 February 2014

48 . பூனையை ஏமாற்றும் எலி!





தேவையானப் பொருட்கள்: 

 

தீப் பெட்டி, பசை, எலி படம், பூனை படம்


செய்முறை:

 

 படத்தில் காட்டியுள்ளது போல் தீப்பெட்டியின் மேல் பகுதியில் பூனையின் படத்தை ஒட்டிக்கொள்வும். பிறகு, தீப்பெட்டியின் உள்ளே இருக்கு டிராயரை வெளியே எடுத்து அதன் அடிப்பகுதியில் எலியின் படத்தை ஒட்டவும். எலி, பூனை படம் எதிரும் புதிருமாக இருக்குமாக படத்தில் உள்ளதுபோல கவனமாக ஒட்டவேண்டும்.
இந்த செயல்கள் முடிந்ததும், பார்வையாளர்களிடம் தீப்பெட்டியைக்காட்டி, " இந்த தீப்பெட்டியில் இருக்கும் பூனை இப்போது ஒரு எலியை பிடிக்கப் போகுது பாருங்கள்' என்று சொல்லி தீப்பெட்டியின் டிராயரை வலது புறம் தள்ளுங்கள். பூனைக்கு எதிராக ஒரு எலி வந்து நிற்கும். பார்வையாளர்கள் ஆச்சரியபடும் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, "இப்போது பாருங்கள் எமகாதக எலி பூனையை ஏமாற்றி ஓடிவிடும்' என்று சொல்லி தீப்பெட்டியின் டிராயரை இடது புறம் தள்ளுங்கள். எலி பூனையின் வால் பகுதியில் இருக்கும். பார்வையாளர்கள் இதைப் பார்த்து வியந்துபோவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:

 

இந்த மேஜிக் செய்வது மிக சுலபமானது. இதில் மேஜிக் சீக்ரெட் தீப்பெட்டியில் ஒட்டப்படும் பூனை, எலி படத்தின் திசை தான்! பூனையும் எலியும் நேருக்கு நேர் பார்க்கும்படி ஒட்டியிருப்பதால் வலது புறம் தள்ளும் போது பூனையும் எலியும் நேரு நேர் தெரியும். இடது புறம் தள்ளும் போது எலி இடது புறம் நகருவதால் பூனையின் வால் பக்கம் சென்றுவிடும்.



No comments:

Post a Comment