Thursday 20 February 2014

38 . உடல் நீளும் பூனை!





தேவையானப் பொருட்கள்:

 

தீப் பெட்டி, பசை, கலர் ஸ்கெட்ச் பென்


செய்முறை: 

 

ஒரு தீப்பெட்டியை எடுத்து அதன் ஒரு பக்கத்தைக் காட்டுங்கள். அதில் பூனையின் தலைப் பகுதி மட்டும் இருப்பதை காட்டுங்கள். பின்னர், இந்தப் பூனையின் உடல் பகுதியை மேஜிக்கினால் காட்டுகிறேன் என்று சொல்லி தீப் பெட்டியை உள்ளங்கையில் வைத்து கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பூனையின் கழுத்து பகுதியில் வைத்து அப்படியே நீளவாக்கில் நகர்த்துங்கள். நீங்கள் விரலை நகர்த்த நகர்த்த பூனையின் உடல் பாகம் நீண்டு கொண்டு வரும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.


மேஜிக் சீக்ரெட்:


தீப்பெட்டியில் வெளிப்புறத்தில் பூனையின் முகப்பகுதியை வரையவும். அதன் உட்புறம் உள்ள அட்டையின் அடிபாகத்தில் மேல் புறத்திற்கு இணையாக பூனையின் உடல் பாகத்தை வரையவும். மேஜிக் செய்யும் போது தீப் பெட்டியை உள்ளங்கையில்வைத்து இடது கை பெருவிரலால் உள்ள புற பெட்டியை தள்ளவும். அப்படி தள்ளும்போது உள் புற பெட்டி வெளியே நீளும் அதை வலது கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டிவிரலால் இழுத்துக் கொண்டே அதே சமயம் பூனையின் படத்தை தவிர மீதி இடத்தை மறைத்துக்கொண்டே இழுத்தால் தீப்பெட்டியின் வெளிபுற படத்தோடு உள்புறத்தில் வரைந்து பெட்டியின் உடல் பாகமும் இணையும். விரலால் உள் பெட்டியை இழுக்க இதனால் பூனையின் உடல் பாகம் நீளுவதுபோல மாயா காட்சியை காட்டும். இதுதான் மேஜிக் சீக்ரெட்!

No comments:

Post a Comment