Thursday, 20 February 2014

56 . மாயமாய் வந்து போகும் ஒயர்!






தேவையான பொருட்கள்:

 

 சிறிய ஒயர் துண்டு, செல்லோ டேப்

செய்முறை:

 

இந்த மேஜிக் செய்வது மிக சுலபம். ஆனால், பார்வையாளர்களை தந்திரமாக ஏமாற்றுவது ரொம்ப கடினம். ஆதலால் மேஜிக் சீக்ரெட்டை தந்திரமாக கையாள வேண்டும்.
பார்வையாளர்களிடம் உங்கள் வலது கை உள்ளங்கையை படத்தில் இருப்பது போல காட்டுங்கள். ""கையில் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""இல்லை!'' என்று பதில். அடுத்து மின்னல் வேகத்தில் விரல்களை குவியுங்கள். குவித்த விரல்களுக்கு இடையில் ஒரு ஒயர் நீண்டு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்துகொண்டிருக்கும் போது, மீண்டும் சட்டென்று குவித்த விரல்களை விரியுங்கள். இப்போது அந்த மாயமாய் மறைந்து இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பின் உச்சத்துக்குப் போவார்கள்!

சீக்ரெட்:


படத்தில் இருப்பது போல வலது புறங்கை கட்டை விரல் நகப் பகுதியில் துண்டு ஒயரை செல்லோ டேப்பால் ஒட்டிக் கொள்ளவும். புறங்கை பக்கம் இருப்பதால் உள்ளங்கைப் பக்கம் தெரியாது. விரலை குவிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் செங்குத்தாக தெரியும். விரல்களை விரிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் புறங்கை பக்கம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு ஒயர் மாயமாய் மறைந்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.



No comments:

Post a Comment