Tuesday, 18 February 2014

காற்றாடி-செய்முறை விளக்கம்



காற்றாடி-செய்முறை விளக்கம்
    













1. A , B , C , D சற்று தடிமனான சதுர வடிவ காகிதம் எடுத்துக்கொள்ளவும்

2. A , D
நீளத்திற்கு இரண்டு மெல்லிய குச்சி தேவை (நாங்க தென்னை ஓலையில் இருந்து எடுப்போம்)

3.
படத்தில் E பச்சை நிறத்தில் உள்ளவாறு A , D இடையில் ஒரு குச்சியை வைத்து ஒட்டவும்

4.
படத்தில் F பச்சை நிறத்தில் உள்ளவாறு இன்னொரு குச்சியை C & B க்கு இடையில் வளைத்து ஒட்டவும்

5.
சிவப்பு G நிறத்தில் உள்ளவாறு ஒரு நூலை (நீளம் பச்சை நிற குச்சி அளவு) எடுத்து பச்சை நிற குச்சியில் கட்டவும்

6.
நீல நிற H நூல் தான் நீங்கள் பிடித்துக்கொள்ளும் நூற்கண்டு அதை சிவப்பு நிற நூலின் மையத்தில் கட்டவும்

7.
காவி நிறத்தில் உள்ளது பட்டத்தின் வால் (சுமாராக 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை இருக்கலாம்) , மெல்லிய பேப்பரில் செய்யவும் "தினசரி செய்திதாள்" மிக பொருத்தமாக இருக்கும்.

8 .
அழகு சேர்க்க வேண்டுமென்றால் , கடையில் பட்டாணி கொடுப்பதற்கு கூம்பு வடிவில் மடிப்பார்கள் அல்லவா அதுபோல சிறியதாக செய்து C மூலையில் ஒன்றும் B மூலையில் ஒன்றும் கட்டி தொங்கவிட்டால் அழகாக இருக்கும் , பட்டம் எளிதாக அதிக உயரத்தை அடையும். (கீழிருந்து காற்று தூக்குவதால் )


அபாயகரமான நூலை பயன்படுத்த வேண்டாம் , யார் மேலேயாவது நூல் சிக்கினால் நூல் எளிதாக அறுந்துவிடும் அளவிற்கு சாதாரண நூலாக பயன்படுத்தவும் , பட்டம் போய்விட்டால் இன்னொன்று செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment