18 . தண்ணீரை ஈர்க்கும் பலுõன்!
தேவையானப்பொருட்கள்:
தேவையானப்பொருட்கள்:
பலுõன், கம்பளி துணி
செய்முறை:
பாலுõனில் காற்றை ஊதி பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், பாலுõனின்
வாய்ப்புறத்தை நுõலினால் இறுக கட்ட வேண்டும். அடுத்து, கம்பளி
துணியால் பலுõனின் மேல் புறத்தைத் தேய்க்க வேண்டும். தேய்த்த சூட்டோடு, குழாயில்
மெலிதாக விழும் தண்ணீர் அருகே கொண்டுச் செல்ல வேண்டும். அப்படிக் கொண்டுச்
சென்றதும், குழாயிலிருந்து
விழும் தண்ணீரை பலுõன் தன்னை நோக்கி ஈர்க்கும் மாயத்தை நீங்கள் ரசிக்கலாம்.
மேஜிக் சீக்ரெட்:
பலுõனின் மீது கம்பளி துணியால் தேய்ப்பதால் அந்த உராய்வின் காரணமாக பலுõன் மீது மின் காந்தம் ஏற்றப்படுகிறது. பலுõன் தேய்த்த சூட்டோடு கீழ் நோக்கி மெல்ல விழும் தண்ணீர் அருகே கொண்டுச் செல்லும் போது பலுõனின் மேல் புறத்தில் உள்ள மின் காந்த சக்தி தண்ணீரை தன் பக்கம் ஈர்க்கும். இது தான் பலுõன் தண்ணீரை ஈர்க்கும் மேஜிக்!
No comments:
Post a Comment