தேவையான பொருட்கள் :
மஞ்சள் துõள், மஞ்சள் நிற துணி,
சுண்ணாம்புத் துõள்,
தண்ணீர்
செய்முறை:
செய்முறை:
இந்த மேஜிக் வித்தை ஒரு தந்திர விளையாட்டுத்தான். இதை மிகுந்த முன்னேற்பாடுடன் செய்ய வேண்டும்.
உங்கள் நண்பர்களிடம் ஒரு மஞ்சள் நிற முள்ள துணியை காட்டுங்கள்."" இந்த மஞ்சள் நிற துணியை உங்கள் கண்முன்பே சிவப்பு கலராக மாற்றுகிறேன் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, மஞ்சள் நிற துணியை எடுத்து நன்றாக விரித்துக் காட்டி, உதறுங்கள்.
பின்னர் தண்ணீர் உள்ள பாத்திரத்தை எல்லாருக்கும் காட்டுங்கள்.
பிறகு அந்த துணியை
பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு,""
ஓம் கிரீம் கிரீம் ... க்லிம் க்லிம் ... மஞ்சள்
துணியே சிவப்பு நிறமாக மாறிவிடு! ம்ம்ம்... கலிம் கிரீம்...'' என்று
மந்திரம் போட்டு விட்டு பாத்திரத்தில் இருக்கும் துணியை வெளியே எடுங்கள்.
மஞ்சள்
துணி சிவப்பு துணியாக மாறி இருக்கும் இதைப் பார்த்து பார்வையாளர்கள்
அசந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்வதற்கு முன்பாக மஞ்சள் துõளை நீரில் கலந்து கலக்கி, அதில் ஒரு மஞ்சள் நிற துணியை நனைத்து ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். அடுத்து தண்ணீர் பாத்திரத்தின் அடியில் ஒரு செ.மீ. அளவு சுண்ணாம்பு எடுத்து பூசி வைத்து கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொள் வேண்டும். இந்த தண்ணீரில் மஞ்சள் துணியை போட்டு விட்டு, அதை எடுக்கும் போது சுண்ணாம்பு தண்ணீரில் கலக்கும் படி ஒரு கலக்குகலக்கி அதில் துணியை அமுக்கி எடுத்தால் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததும் மஞ்சள் துணி சிவப்பாக மாறும்!
இதில் மேஜிக் சீக்ரெட் மஞ்சள் சுண்ணாம்பு!
No comments:
Post a Comment