தேவையானப் பொருட்கள்:
நோட்டு,
ஸ்கெட்ச் பென்
செய்முறை:
ஒரு புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தில்
ஒரு புள்ளியை வைத்து, அந்தப் புள்ளி ஒவ்வொரு பக்கமாக மேலே நகரும் என்று சக
நண்பர்களிடம் சொல்லி, படத்தில் காட்டியவாறு புத்தகத்தின் பக்கத்தை புரட்டுங்கள்.
புள்ளி சர்ர்... என்று மேலே நகர்ந்து செல்லும். அதைப் பார்த்து நண்பர்கள்
மகிழ்வார்கள்!
மேஜிக் சீக்ரெட்!
மேஜிக் சீக்ரெட்!
ஒரு பாட புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தில் ஒரு ஓரமாக படம் 1ல் காட்டியவாறு, கீழ் இருந்து மேலாக ஒவ்வொரு பக்கமாய் புள்ளி வைத்துக்கொண்டு வரவும்.
அல்லது மேல் இருந்து கீழாகவும் ஒவ்வொரு பக்கத்திலும் புள்ளி வைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது புத்தகத்தை மறுபக்கம் திருப்பி கீழ் பக்கம் மட்டும் ஒரே ஒரு புள்ளி வைத்துகொள்வும்.
ஒரு ஒரு புள்ளி வைத்த பக்கத்தை மட்டும் காட்டி விட்டு, அந்த புள்ளி மேலே செல்லுவதாக சொல்லி, புத்தகத்தை திருப்பி கடைசி படத்தில் இருப்பது போல காட்டினால் புள்ளி கீழ் இருந்து மேலே நகருமாதிரி தெரியும்!
No comments:
Post a Comment