Wednesday 19 February 2014

34 . தானாக அறுந்து விழும் நுõல்!



34 . தானாக அறுந்து விழும் நுõல்!

தேவையானப் பொருட்கள் :
 
கண்ணாடி பாட்டில், நுõல், கனமான ஒரு சிறிய துண்டு, பூதக்கண்ணாடி

செய்முறை:
 
இது ஒரு மேஜிக் விளையாட்டு. பாட்டிலில் தொங்க விடப்பட்டுள்ள நுõலை வெளியில் இருந்தே அறுப்பதாகும். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ள முதலில் படத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவும். பிறகு, ஒரு கனமான பொருளை பஞ்சு நுõலின் நுனியில் கட்டிக் கொள்ளவும். அதை கண்ணாடி பாட்டிலில் உள்ளே தொங்கவிட்டு, அதன் மேல் முனையை பாட்டிலின் வெளிபுற வாயில் சுற்றி கட்டிக் கொள்ளவும். பின்னர் மூடி போட்டு இறுக மூடிவிடவும்.

இந்த பாட்டிலை அப்படியே சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துக்கொள்ளவும். ஒரு பூதக்கண்ணாடியை எடுத்து, பாட்டிலின் உள்ளே செங்குத்தாக தொங்கும் நுõலின் மையப்பகுதியை நோக்கி பூதக்கண்ணாடி வழியாக செல்லும் ஒளியை ஒரு புள்ளியாக குவிக்கவும்.

இப்படி சில நிமிடங்கள் பூதக்கண்ணாடியைக் காட்டிக் கொண்டே இருந்தால் பாட்டிலில் இருக்கும் நுõல் சட்டென்று அ அறுந்து விழும். இது தான் பாட்டிலுக்குள் இருக்கும் நுõலை அறுத்து விளையாடும் மேஜிக்!


No comments:

Post a Comment