தேவையானப் பொருள்:
ஒரு மெழுகுவர்த்தியும் ,தீப்பெட்டியும்
.
செய்முறை:
செய்முறை:
முதலில் மெழுகுவர்த்தியை எரியவிடுங்கள் சில வினாடிக்குபின்
மெழுகுவர்த்தியை அணைத்துவிடுங்கள் .பின்னர் தீக்குச்சியை கொளுத்தி மெழுகுவர்த்திக்கு சற்று தொலைவில் வையுங்கள் .இப்பொழுது தானாகவே நெருப்பு
மெழுகுவர்த்தியினுள் ஐக்கியமாகி மெழுகுவர்த்தி சுடரிடநேரிடும்.


மேஜிக் சீக்ரெட்!
முதலில் மெழுகுவர்த்தியில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அணைத்துவிடுங்கள் பின்பு அதிலிருந்து வரும் புகையை நோக்கி நெருப்பை
காட்டுங்கள். இப்பொழுது அந்த புகையின் வழியாக தீக்குச்சியிலிருக்கும் நெருப்பு இழுக்கப்பட்டு மெழுகுவர்த்தி எரிய ஆரம்பித்துவிடும் .

முக்கியகுறிப்பு :
இதை பார்வையாளர்கள் கண்டுபிடிக்காதவண்ணம் உங்கள் செயல்பாடு வேகமாகவும் ,விவேகமாகவும் இருக்க வேண்டும் .அதனால் முதலில் பலமுறை சுயபயிற்சி செய்துகொண்டு பின்னர் நண்பர்களிடம் செய்துகாட்டி
கலக்குங்கள் .
பின்குறிப்பு :
இதை சில பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வார பத்திரிகையில் படித்ததாக நினைவு . அப்பொழுது நண்பர்களிடம் செய்துகாட்டி பாராட்டுகளும் பெற்றதுண்டு அதேசமயம் சரியாக செய்யாமல் சிலரிடம் மொக்கை வாங்கிய தருணங்களும் உண்டு
No comments:
Post a Comment