Sunday 23 February 2014

அன்னி பெஸண்ட் அம்மையார்-சுதந்திரப் போராட்ட வீராங்கனை




இந்திய சுதந்திரப் போர்க்களத்தில் சுதேசி சிந்தனையுடன் ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய வீரர்கள் அநேகம்பேர். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! காரணம் தம் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்க, அம்மண்ணின் மைந்தர்கள் போராடுவது இயல்பானதும் யாராலும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.
ஆனால், வேற்று நாட்டில் பிறந்து, இந்த மண்ணுக்கு வந்து, இந்தியா என் தாய்நாடு என்று உள்ளத்தால் ஒன்றிப்போய், இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தார் ஓர் அன்னிய நாட்டுப் பெண்மணி, என்றால் நமக்கு ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும். ஆம். அப்படி ஒருவர்தான் புகழ்பெற்ற ஹோம்ரூல் இயக்கம் தொடங்கிய ஐரிஷ் பெண்மணியான அன்னிபெஸண்ட் அம்மையார்.
அன்னி பெஸண்ட், ஏழ்மையும், மனிதத்தன்மையற்ற தாழ்வுநிலையும் கோலோச்சிய பிரதேசமான லண்டனின் கிழக்குப் பகுதியில் பரோபகார நங்கை என்று பிரபலமடைந்தவர். அவர் பரோபகா஡஢ மட்டுமல்ல; ஆவேசமூட்டக்கூடிய பேச்சாளர், பெருந்திரளான மக்களின் தலைவர். அவருடைய சீர்திருத்தவாத ஜனநாயகச் சேவைகள், பி஡஢ட்டன் முழுமைக்குமே நன்றாகத் தொ஢ந்தவை. இந்தியாவிலும் அவை பிரபலமடைந்தன.
இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களான சுவாமி விவேகானந்தர், அரவிந்த கோஷ், லோகமான்ய திலகர் ஆகியோ஡஢ன் சமகாலத்தவர் அன்னி பெஸன்ட். உண்மையையும் நீதியையும் தேடித் துடிதுடிக்கின்ற ஆன்மாவைக் கொண்ட, பெண் உடையிலே தோன்றிய டெமாஸ்தனிஸ்என்று தன் நண்பர்களால் அன்புடன் வர்ணிக்கப்பட்டார்.
அன்னிபெசண்ட் என்று அழைக்கப்பட்ட அன்னிவுட் பிறந்தது லண்டனில். 1847 அக்டோ பர் முதல் தேதி பிறந்தவர் அன்னிவுட். அவருடைய தந்தை டாக்டர் வில்லியம் பேஜ்வுட் என்பவர். தாயார் பெயர் எமிலி என்பது. எமிலியின் முன்னோர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். அன்னியின் தந்தை மருத்துவ வல்லுநராக மட்டுமல்லாது, சிறந்த மேதையாகவும் திகழ்ந்தார். ஆனால் அன்னிவுட்டின் ஐந்தாவது வயதிலேயே அவருடைய தந்தையார் வில்லியம் பேஜ்வுட் கடுமையான நோயின் காரணத்தால் இறந்துபோனார்.
அதன்பிறகு எமிலி தன் இரு குழந்தைகளை வளர்ப்பதில் சிரமப்பட்டார். அந்நிலையில் எமிலியின் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோன மிஸ் மேரியாட் என்பவர் அன்னிவுட்டுடன் ஆசையாகப் பழகிவந்தார். தன்னுடைய இன்னொரு குழந்தை ஹாரியையாவது நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணிய எமிலி, அன்னிவுட்டை தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்க விரும்பிய மிஸ் மேரியாட்டின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
இப்படி அன்னிவுட் தன் ஏழாவது வயதில் மிஸ் மேரியாட்டுடன் பாரீஸ் நகருக்குப் பயணமானார். மிஸ் மேரியாட் செல்வச் செழிப்பில் மிதந்தவர். அந்தச் செழிப்பு மிகுந்த வாழ்வு அன்னிவுட்டுக்கும் இளவயதில் அமைந்தது. குதிரையேற்றம், வில்வித்தை போன்றவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதோடு அங்கு பிரெஞ்சு மொழியும் கற்றுக்கொண்டார்.
அன்னிவுட்டுக்கு 14 வயது இருக்கும்போது மிஸ் மேரியாட் ஜெர்மனிக்குச் சென்றார். அதனால் அன்னிக்கு ஜெர்மன் மொழியும் பயில வேண்டிய சூழல் உருவானது.
அங்கு பிராங்க்பெஸண்ட் என்பவர் அன்னியைக் காதலித்து மணந்துகொண்டார். அன்னியின் திருமணம் 1866 இல் அவருடைய 20ஆவது வயதில் நடந்தது. பிராங்க்பெஸண்ட் தீவிரமான ஒரு கிறிஸ்துவ மதபோதகராக விளங்கினார். அவருடைய சடங்கு சம்பிரதாயங்களுக்கு அன்னிபெசண்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர் அதைத் தீவிரமாக வெறுத்தார். இந்நிலையில் அன்னி பெசண்டுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரு குழந்தைகள் பிறந்தன.
பிராங்பெஸண்ட் தன்னுடைய கிறிஸ்துவ மத சடங்கு சம்பிரதாயங்களுக்கு ஒத்துழைக்குமாறும் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு அவருடைய விருப்பத்திற்கு இணங்க நடந்துகொள்ள வேண்டும் என்றும் அன்னிபெஸண்டை வற்புறுத்தினார். ஆனால் அவருடைய கணவனின் அடக்கியாளும் சர்வாதிகாரப் போக்கு அன்னிபெஸண்டுக்குப் பிடிக்கவில்லை. அதனால் விரக்தியுற்ற அவர், 1873 இல் அவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
அதன்பின்னும் தன்னுடைய குழந்தைகளைப் பார்ப்பதற்குக் கூட அவர் நீதிமன்றத்தை அணுகவேண்டிய சூழல் நிலவியது. ஆனால் பிற்காலத்தில் அவர்கள் அன்னிபெஸண்டுடன் இணையவேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இயல்பிலேயே சேவை மனப்பான்மையும் சமூக அக்கறையும் கொண்டிருந்த அன்னிபெஸண்டுக்கு ஏற்ற தளமாக அமைந்தது ஒரு நிகழ்ச்சி. அவர் 1875 இல் அவர் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டார். மேடைப்பேச்சு எழுத்து என்று இயங்கினார். அது அவருடைய சமூக சிந்தனை வெளிப்பாட்டின் இன்னொரு தளமாக அமைந்தது. இந்நிலையில் 1875 நவம்பர் 17 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரம்ம ஞான சபை தொடங்கப்பட்டது.
உலகிலுள்ள அனைத்து மதங்களின் நல்லனவற்றைக் கொண்ட ஒருங்கிணைப்புப் பாலமாக இந்த சபையை நிறுவ எண்ணம் கொண்டிருந்தார் அதன் நிறுவனர் பிளாவட்ஸ்கி அம்மையார். அனைத்து மத நல்லிணக்கம் பேணும் அமைப்பாக அதைப் பரிமளிக்கச் செய்ய பல நடவடிக்கைகளை அதன் தலைவர் என்ற முறையில் எடுத்துவந்தார்.
இந்த அமைப்பின் தொடர்பு அன்னிபெஸன்டுக்குக் கிடைத்தது. அவர் அந்த சபையின் நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டினார்.
1891 இல் பிரம்மஞான சபைத்தலைவராக இருந்த பிளாவட்ஸ்கி அம்மையார் மறைந்தார்.
அதைத் தொடர்ந்து அன்னிபெஸண்ட் அந்த அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். அந்த ஈடுபாட்டால் அவர் ஆன்மிக பூமியான இந்தியாவுக்கு வந்து சேவை செய்ய எண்ணம் கொண்டார். அதற்காக அப்போதைய ஆங்கில அரசுடன் போராடி இந்தியா வர அனுமதி பெற்று, 1893 நவம்பர் 16 இல் இந்தியா வந்தார். அப்போது அவருக்கு வயது 47.
ஆன்மிக விஷயமாக இந்தியாவுக்கு வந்தவர் இந்திய மக்களின் ஆன்மிக உணர்வுகளோடு, அப்போது சமுதாயத்தில் நிலவிய பல்வேறு சூழ்நிலைகளால் மனம் வருந்தி, சமூக சீர்திருத்தவாதியாகவும் மாறிப்போனார். இறை உணர்வோடு சமுதாயப் பணியும் சேர்ந்து கொள்ள கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவர் இந்திய மக்களின் வாழ்க்கை முறையோடு கட்டிப்போடப்பட்டிருந்தார். அதன்பிறகு பிரம்ம ஞான சபைக்கு தலைவியாக அவர் நியமிக்கப்பட்டு, திறம்படச் செயலாற்றினார்.
ஆன்மிகத்தோடு அவர் நின்றுவிடவில்லை. ஆன்ம விடுதலை என்பது எப்படி தனிநபருக்கான மோட்ச மார்க்கமோ அதுபோல் நாட்டு விடுதலை என்பது மக்கள் அனைவருக்குமான மோட்ச மார்க்கம், அதாவது சுதந்திர மார்க்கம் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
ஓஇந்திய நாடு மிகவும் புனிதம் வாய்ந்தது; இந்தப் புண்ணிய பூமியில் பிறப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்தியாவே என் தாய்நாடுஔ என்று முழங்கினார் அன்னிபெஸண்ட்.
இந்தியர்கள் அனைவரும் சகோதரர்கள், இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும்; தங்களுக்கான கைத்தறி போன்ற உடைத்தேவைகள், கல்வி, உணவு, போன்ற தேவைகளை அவர்களே அறிவார்கள்; அவர்களே அவற்றை நிறைவேற்றிக் கொள்வார்கள்என்று சொல்லி சுதேசியத் தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தினார், அதே சமயம் ஆங்கில ஆட்சியாளர்களின் எதேச்சாதிகார எண்ணத்திற்கு அடி கொடுத்தார்.
அரசியல் மற்றும் சமூக எண்ணம்:
அரசியல் மற்றும் சமூக எண்ணம் கொண்டிருந்த அன்னி பெஸண்ட் 1913 இல் நாட்டு விடுதலைக்கான களமாகத் திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டு தன்னுடைய ஈடுபாட்டை பெருக்கிக் கொண்டார்.
அதன் பலனாக, 1918 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் அன்னிபெஸண்ட் அம்மையாரே தலைமை தாங்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இப்படி காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பு பெற்றார் அன்னி பெஸண்ட் அம்மையார்.
அந்த மாநாட்டில் அவர் தன் தலைமையுரையில் தெரிவித்த கருத்துக்கள் சுதேசிச் சிந்தனையாளர்களுக்கு வீரவேசத்தை ஊட்டின. மண்டியிட்டு பிச்சை கேட்கும் நிலையில் இந்தியா இல்லை. தலை நிமிர்ந்து உரிமை கேட்கும் நிலையில் இருக்கிறதுஎன்று ஆங்கில ஆட்சியாளர்க்கு அறைகூவல் விடுத்து மாநாடு அதிர முழங்கினார்.
எந்த ஆங்கிலேயனாவது இங்கிலாந்தில் வெளிநாட்டவன் ஒருவன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதை அனுமதிப்பானா? அடிமை மக்களாக இன்று ரயிலில் பயணம் செய்வதைவிட, சுதந்திர மனிதர்களாக கட்டை வண்டியில் பயணம் செய்வதையே இந்தியர்கள் விரும்புகின்றனர்…” என்று வீர முழக்கம் செய்தார். அவருடைய கருத்துக்கள் ஆங்கில ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தவகையில் சுதேசி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தல், சாதி முறை எதிர்ப்பு, நலிவுற்றோர் உயர்வுக்குப் பாடுபடுதல், ஆங்கில அரசின் அராஜகத்தை வெளிப்படுத்துதல் என்று அவருடைய அரசியல் ஈடுபாடு வெளித்தெரிந்தது.
பெண்கள் சுதந்திரம்:
தான் ஒரு பெண்ணாக இருந்து அனுபவித்த இன்னல்களை மனத்தில் கொண்டு, எவ்விதமாகவேனும் பெண்கள் கொடூரங்களை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் 1917 இல் மாதர் சங்கம் அமைத்தார். அதன்மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வுகளைப் பரப்பினார். பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடப்பதால், அவர்களில் பெரும்பாலோர் இளவயதிலேயே விதவைகளாக ஆகி விடும் கொடுமையைக் கண்டு மனம் நொந்து பால்ய விவாகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த விஷயத்தில் ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் அன்னி பெஸண்ட் அம்மையார்.
பால்ய விவாகம் போலவே சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சமூகத்தின் இன்னொரு பகுதியில் இருந்த விதவைகளுக்கு மொட்டையடிப்பதையும் வெள்ளாடை உடுத்தச் செய்வதையும் மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தடுத்தலையும் எதிர்த்துப் போர்க் குரல் எழுப்பினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்துப் பேசினார்.

பெண்கள் தங்கள் சுயவருமானத்தில் வாழ்ந்தால் அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நம்பினார் அன்னிபெஸண்ட். அதனால் அவர்கள் சுயதொழில் மூலம் வருமானம் பெறச்செய்ய வலியுறுத்தினார்.
பெண்கள் சுதந்திரம் என்பதோ, பெண் விடுதலை என்பதோ பெண்கள் ஆணுக்கு எதிராக வாழ்வதல்ல; சிறந்த மகளாக தாயாக வாழ பயிற்றுவிப்பதேஎன்ற கொள்கையால் பாரம்பர்யத்தை மதித்த பெண்மணிகள் மத்தியிலும் அவருடைய செல்வாக்கு அதிகரித்தது.
அவருடைய சொற்பொழிவுகள் இப்படி பெண்களை மையப்படுத்தி இருந்தபோதும் அவற்றில் சுதந்திர வேட்கை பரிமளிக்கும். காரணம் நாடு சுதந்திரமடைய ஆண்கள் மட்டும் ஈடுபட்டால் போதாது; பெண்களும் அதிக அளவில் தயாராக வேண்டும் என்பதாலேயே அவர் இத்துறையில் கவனம் செலுத்தினார்.
குறிப்பாக பெண்கல்வி மட்டுமல்லாது, இந்தியர்கள் அனைவரும் கல்வியறிவு பெறச் செய்ய வேண்டும் என்பது பற்றிய அவருடைய கொள்கைகள் முற்போக்கானவையாக இருந்தன.
அவருடைய சுதேசக் கல்வி போதனை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியப் பண்பாட்டை, கலாசாரத்தை வளர்க்கக் கூடிய கல்வி வேண்டும். மெக்காலே போதனையில் உருவான ஆங்கில ஆட்சியாளர்களுக்கு வேலையாட்களை உருவாக்கித் தரக்கூடிய கல்வி போதனை கூடாது…” என்ற எண்ணத்தை விதைத்தார்.
அதோடு நின்று விடாமல் 1898 இல் காசியில் மத்திய இந்துக் கல்லூரியையும், 1904 இல் மத்திய உயர்நிலைப்பள்ளியையும் நிறுவி கல்வி குறித்த தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவை மூலம் சமயம், சமூகம் சார்ந்த பாடங்களை முக்கியப் பாடங்களாக வைத்து, அவற்றை அந்த நிறுவனங்களில் போதிக்க ஏற்பாடு செய்தார்.
1907 இல் அடையாறு பிரம்மஞான சபைத் தலைவியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவருடைய ஆன்மிக சார்ந்த பணிகளும் விரிவடைந்தன.
அன்னிபெஸண்ட் கடிதம் எழுதுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தாராம். அவருடைய கையெழுத்து மிக அழகாக இருக்கும். அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், சுவீடன், ஸ்காட்லாந்து, ஹாலந்து போன்ற நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் பெருமையைப் பறை சாற்றினார். அங்குள்ளோரிடம் கடிதத் தொடர்பு கொண்டு, பலமான ஆன்மிகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
அன்னிபெஸண்டின் பொதுவாழ்வில் அவருக்குப் பெரும் பெயரையும் புகழையும் கொடுத்த ஒரு இயக்கம்தான் ஹோம்ரூல் இயக்கம். இந்தியாவை இந்தியர்களே ஆண்டு கொள்வார்கள் என்று அவர் தெரிவித்த அந்தக் கருத்து ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
அன்னிபெஸண்ட் அம்மையார் பல நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய கீதை மொழிபெயர்ப்பு நூல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்நூலைப் படித்துவிட்டு அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மகாத்மா காந்தி, அவரை வெகுவாகப் பாராட்டினார்.
அன்னிபெஸண்டுக்கு இயல்பிலேயே கணீர் குரல் என்பதால், தொலைவில் அமர்ந்திருப்பவர்கள் கூட அவருடைய குரலை தெளிவாகக் கேட்பர். குறித்த நேரத்தில் தொடங்கி சொற்பொழிவை குறித்த நேரத்தில் முடிப்பது அவருடைய கொள்கையாக இருந்தது. அவருக்கு நல்ல மேடைப்பேச்சு கைவரப் பெற்றிருந்தது.
அவருடைய 82 ஆவது வயதில் 28 நாட்கள் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து, 56 முறை சொற்பொழிவாற்றி சாதனை படைத்தார் அன்னிபெஸண்ட். இந்தியாவே விழித்தெழுஎன்ற தலைப்பில் அவருடைய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டன.
சொற்பொழிவுத் துறை மட்டுமல்லாது சுதந்திரக் கனல் பரப்பும் எழுத்துத் துறையிலும் அவருடைய ஆதிக்கம் இருந்தது. 1904 இல் பொதுநலம் என்ற வார இதழையும் புது இந்தியா என்ற தினசரிப் பத்திரிகையையும் அவர் தொடங்கினார்.
இப்படி 18 பத்திரிகைகளை அவர் நடத்தியிருக்கிறார். பத்திரிகையோடு நின்றுவிடாமல், ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், வீரர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் கிட்டத்தட்ட 362 நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.
அன்னிபெஸன்ட் அம்மையாரின் இத்தகைய நல்லியல்புகளுக்குக் காரணமாக அமைந்தவை சிறுவயதில் அவர் படித்த நூல்கள். பிறகு அவர் மகப்பேறுக்காகவும் மனக்கவலையிலும் மருத்துவமனையில் இருந்தபோது இவருடைய இயல்பு அறிந்த மருத்துவர் விஞ்ஞானம் மற்றும் பிளாட்டோ , தத்துவக் கவி தாந்தோ போன்றோரின் நூல்களைப் படிக்கக் கொடுத்தாராம். அந்நூலறிவே அவருடைய சமயசமூக ஈடுபாட்டுக்குக் காரணமாக அமைந்தன என்பதை அவர் பதிவு செய்திருக்கிறார்.
உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதைத்தான்நம்முள் இருந்து இறைவன் நம்மை இயக்குகின்றார். இறைவன் குடிகொண்ட கோயில் நம் உடல்…” என்பது அன்னிபெஸன்டின் ஆன்மிகம் சார்ந்த கருத்து.
இந்தியர்களே! பரம்பொருள் ஒன்று என்பதை உணர்ந்தவர்களின் வழித்தோன்றல்களேசமயம் / அரசியல் பெயரால் சண்டை எதற்கு? உங்களை நீங்களே ஏன் தாக்கிக் கொள்கிறீர்கள்? கட்சிகளைக் காட்டிலும் தாய்நாடு பெரிதாயிற்றே! மதங்களைக் காட்டிலும் ஆன்மிக உணர்வு பெரிதாயிற்றே!என்று எழுதி மக்களின் பிரிவினை எண்ணத்தை மாய்த்து, உணர்வுகளின் அடிப்படையில் ஒன்றுபட வலியுறுத்தினார்.
உயர்ந்த நோக்கத்திற்காக தியாகம் செய்வது பேரின்பம் என்றார் அன்னி பெஸண்ட் அம்மையார். இவருடைய கருத்துகளால் கவரப் பட்டிருந்த பண்டித நேரு அவர்கள், அன்னிபெஸண்டைப் பற்றிச் சொல்லும்போது, ” இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கு மகத்தானது. அவர் எம் தலைமுறையை ஊக்குவித்த ஆக்க சக்தி. அவர் ஒரு வாழும் காவியம்…” என்றார்.
ஜவஹர்லால் நேரு தன்னை ஊக்குவித்த ஆக்க சக்தி அன்னி பெஸண்ட் என்று சொன்னதற்கு ஒரு காரணமும் உண்டு. ஒரு சமயம் அன்னி பெஸன்ட் அம்மையார் நேரு குடும்பத்தினரோடு தங்கியிருந்தார். அவர் ஜவகர்லாலிடம் வெகுதூரத்துக்கு அப்பாலுள்ள பி஡஢ட்டனைப் பற்றியும், அங்கே ஆங்கிலேயர்கள் மத்தியில் இந்தியர்களை சகோதரர்களாகக் கருதுபவர்கள், காலனியாதிக்க அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கூறினார்.
அவருடைய பேச்சில் கவரப்பெற்ற மோதிலால் நேரு, தன் மகனுக்கு ஐரோப்பியக் கல்வி கற்பிக்க உறுதி கொண்டிருந்தார். தன் மகனுக்குக் கல்வி கற்பிப்பதற்கு, கல்வி கற்ற ஐரோப்பியர்கள் மத்தியிலிருந்து ஒரு ஆசி஡஢யரைத் தேர்ந்தெடுக்கத் தனக்கு உதவி செய்யுமாறு அன்னி பெஸன்ட்டைக் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அன்னிபெஸண்ட் அன்னிபெஸண்ட் ஒருவரை ஜவஹர்லாலுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இறுதிக் காலம்: 
இந்தியாவே என் தாய்நாடு என்று சொல்லிவந்த அன்னிபெஸண்ட், தன் இறுதிக்காலத்தை காசியில் கழிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருடைய அந்த ஆசை நிறைவேறவில்லை. இறுதியில் அவர் 1933 செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தம் 86 ஆம் வயதில் உயிர் நீத்தார்.
பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த அன்னிபெஸண்ட் அம்மையாரை சமகாலத்துப் பெரியவர்கள் பலர் பாராட்டியும் போற்றியும் உள்ளனர். அந்த வகையில் திரு.வி.கல்யாண சுந்தரனார் தாம் நடத்தி வந்த தேசபக்தன் இதழில் அன்னிபெஸன்ட்டைக் குறிப்பிடும்போது அன்னி என்பதற்குப் பதிலாக அன்னைபெஸண்ட் என்றே குறிப்பிட்டு ஆதரவளித்து வந்தார்.
ஆனால் விடுதலைப் போரில் தீவிரப் பற்றாளர்களாக இனங்காணப்பட்ட மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர் போன்றோருக்கு அன்னிபெஸண்ட் அம்மையாரின் செயல்பாடுகளில் அதிருப்தி நிலவியிருக்கிறது. அதனால் அவர்கள் அன்னிபெஸண்ட் அம்மையாரின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர்கள் ஒரு காரணத்தைக் கூறினர்
அன்னிய ஆதிக்கத்தினின்று விடுதலை பெற நாம் முனைந்திருக்கிறோம். அதற்கு ஓர் அன்னிய ஸ்திரீயின் உதவியை நாடுதல் எங்ஙனம் பொருந்தும்? அது பாரத ஜாதியின் தன் மதிப்புக்குக் குறைவல்லவா?” என்றனர்.
மேலும், “நம் நாட்டில் பூரண சுயராஜ்ஜியம், பரிபூரண விடுதலை என்பதை நோக்கி நாம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அன்னிபெஸண்டோ ஆங்கிலேயர் அரசு புரிந்தாலும் பரவாயில்லை; ஆட்சியை மட்டும் இந்தியர்களிடமே விட்டுவிடவேண்டும் என்ற கொள்கையை எழுதியும் பேசியும் வருகிறாரேஎன்றும், “நம் சனாதன ஆன்மிகத் தத்துவங்களைத் திரித்துக் கூறி நசுக்க முயல்கிறார்என்றும் சில தீவிரப் போக்காளர்கள் எழுதத்தான் செய்தனர்.
ஆனாலும் அன்னிபெஸண்டின் குரலை பெரும்பான்மை காங்கிரஸ் பேரியக்கத்தினர் அன்புடன் வரவேற்றனர்.
வாழ்வில் எத்தனையோ சோதனைகளைக் கடந்து அன்னிபெஸண்ட் போன்றோர் இந்த நாட்டின் சரித்திரத்தில் அழியாத சில பக்கங்களை எழுதிவிட்டுச் சென்றிருக்கின்றனர். அவருடைய ஆத்ம ஞானத் தத்துவ விளக்கங்களைக் கேட்போர் ஆன்ம ஒருமை கண்டுள்ளனர். இன்றும் பிளவுப்பாதையில் செல்லும் உலகிலிருந்து மீண்டு, ஒருமை உள்ளம் காண்பதே அத்தகைய தியாக உள்ளத்துக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

No comments:

Post a Comment