தேவையானப் பொருட்கள்:
எலுமிச்சம் பழம், சிவப்பு
மை, கத்தி, ஊசி
(சிரின்ஞ்)
செய்முறை:
செய்முறை:
ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து, அதை
பார்வையாளர்களிடம் காட்டி விட்டு,
""இந்த எலுமிச்சம் பழத்தில் இருந்து ரத்தம்
சொட்ட செய்கிறேன் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு,
எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து
உருட்டுங்கள். பிறகு, எலுமிச்சம் பழத்தை டேபிளில் வைத்து, கண்களை
மூடிக்கொண்டு, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு,"" "ஜூம் ஜூம் ஜூம்
ஜூஹா' ரத்தமே
இந்த பழத்தில் இருந்து வந்துடு!'' என்று கூறிவிட்டு,
பார்வையாளர்களில் ஒருத்தரை எலுமிச்சம் பழத்தை
கத்தியால் வெட்டச் சொல்லுங்கள். அவர்,
பழத்தை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம்
சொட்டும். பார்வையாளர்கள் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்யும் முன்பாக ஒரு
ஊசி(சிரின்ஞ்)யில் சிவப்பு மையை உறிஞ்சி அதை எலுமிச்சம் பழத்தின் உள்ளே செலுத்த
வேண்டும். பார்வையாளர்களுக்குத் தெரியாமல் இந்த ரகசியத்தை காப்பாற்றுவது தான் இந்த
மேஜிக் டெக்னிக்!
உள்ளங்கையில் வைத்து எலுமிச்சையை உருட்டும் போது பழத்தில் பாய்ச்சிய சிவப்பு இங்க் சாறுடன் கலந்து சிவப்பாக உள்ளே மாறி இருக்கும். அதை வெட்டியதுமே சிவப்பாக சாறு வெளியே வரும்.
No comments:
Post a Comment