Thursday, 20 February 2014

51. அறுந்த நுõல் ஒன்றாகும் மேஜிக்





தேவையானப் பொருட்கள்:

 

ஸ்டிரா, நுõல், கத்தரிக்கோல்


செய்முறை:

 

ஒரு ஸ்டிராவை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டி அதில் ஒன்றுமில்லை என்பதை தெளிவு படுத்துங்கள். பின்னர் அந்த ஸ்டிராவில் ஒரு நுõலை நுழையுங்கள். பிறகு அதை அப்படியே இரண்டாக மடியுங்கள். மடித்த முனையை கத்தரிக்கோலால் வெட்டுங்கள். பார்வையாளர்களிடம், "" இந்த ஸ்டிராவில் உள்ள நுõலோடு இரண்டாக வெட்டி விட்டேன். நுõலும் இரண்டு துண்டாக வெட்டியாகிவிட்டது. இப்போது மேஜிக் செய்து வெட்டப்பட்ட நுõலை ஒன்றாக வெளியே எடுக்கிறேன்' என்று சொல்லி வெட்டப்பட்ட ஒரு ஸ்டிராவிலிருந்து நுõலை இழுக்கவும். நுõல் வெளியே முழுமையாக வந்துவிடும். பிறகு நுõலை இழுத்து காட்டுங்கள் அது வெட்டப்பட்டது இணைந்து இருக்கும். பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
 

மேஜிக் சீக்ரெட்:


மேஜிக் செய்யும் முன்பாக ஸ்டிராவின் மத்தியில் இரண்டு சென்டிமீட்டர் அளவு நீளவாக்கில் கத்தியால் கிழித்து கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது இரண்டாக மடக்கி, ஸ்டிராவின் இரண்டு முனையிலும் தொங்கும் நுõலை இழுத்தால் வெட்டப்பட்ட பகுதியிலிருந்து நுõல் கீழே இறங்கி விடும். அந்த இடத்தில் நுõல் இருக்காது. ஆதலால் நீங்கள் கத்தரிக்கோலால் வெட்டும் போது நுõல் வெட்டுப்படாது. இது தான் மேஜிக் சீக்ரெட்! 



No comments:

Post a Comment