Thursday 20 February 2014

57 . கண்ணை ஏமாற்றும் பூமாராங்!





தேவையான பொருட்கள்:

அட்டை, காம்பஸ், பென்சில், கத்தரிக்கோல், கலர் ஸ்கெட்ச் பென்.
செய்முறை:


சற்று தடிமனான இரு அட்டையை எடுத்து, ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பிறகு, காம்பஸ் உதவியுடன் பென்சிலால் ஒரு ஆர்க் வரையவும். அடுத்து, ஒரு செ.மீ கீழ் நோக்கி இன்னொரு ஆர்க் வரையவும். ஆர்க் கோடு மீது கத்தரி வைத்து நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய ஆர்க் பகுதியை தனியே எடுத்தால் அது படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும். மேலே உள்ள அட்டைக்கு சிகப்பு வண்ணமும், கீழே உள்ள அட்டைக்கு மஞ்சள் வண்ணமும் பூசவும்.
வண்ணம் பூசப்பட்ட அட்டை களை படத்தில் காட்டியவாறு ஒரு டேபிளில் முதலில் சிகப்பு அட்டையும் அதன் கீழ் மஞ்சள் அட்டையை வைக்கவும். பார்வையாளர்களிடம் ""இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டையில் எது பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்கள் சிகப்பு அட்டைதான் பெரியது என்பர். பின்னர், மஞ்சள் அட்டைய மேலே வைத்து அதன் கீழ் சிவப்பு அட்டையை வைத்து, "" இப்போது எந்த அட்டை பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""மஞ்சள் அட்டை'' என்று பதில் வரும். முடிவில் இரண்டு அட்டையையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதை பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு, இரண்டு ஒரே அளவு உள்ள அட்டை தான் என்று சொல்லுங்கள். பார்வையாளர்கள் தங்கள் கண்களை ஏமாற்றிய பூமாராங் அட்டையை நினைத்து ஆச்சரியப்படுவார்கள்!

சீக்ரெட்:

 

 சம அளவு உள்ள அட்டை என்ற போதிலும் ஒன்றன்கீழ் ஒன்றாக வைக்கும் போது பார்ப்பவர்கள் கண்கள் மேலே உள்ள அட்டையின் உள் வட்டத்தோடு கீழே உள்ள அட்டையின் வெளி விட்டத்தை ஒப்பீடு செய்வதால் தோன்றும் மாயபிம்பம் தான் பெரிது, சிறிது என்று சொல்ல வைக்கும் சீக்ரெட்!


No comments:

Post a Comment