Thursday, 20 February 2014

42 . காபி குடிக்கும் காசு!




தேவையானப்பொருட்கள்:

 

தட்டு, கண்ணாடி கிளாஸ், மெழுகு வர்த்தி, தீப் பெட்டி, ஒரு ரூபாய் காசு, காபி

செய்முறை:


ஒரு தட்டில் கொஞ்சம் காபியை ஊற்றவும். ஊற்றிய காபியில் ஒரு ரூபாய் காசு விடவும். காசுக்கு அருகில் ஒரு மெழுகு வர்த்தியை எரியவிடவும்.
இப்போது பார்வையாளர்களிடம் இந்த ஒரு ரூபாய் காசுக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இந்த தட்டில் இருக்கும் காபி யைஒரே மூச்சில் ஊறிஞ்சி குடிக்கும் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, எரியும் மெழுவர்த்தி மீது கண்ணாடி கிளாசை வைத்து மூடுங்கள். சில நிமிடங்களில் தட்டில் இருந்த காபியை காசு முழுவதுமாக குடித்திருக்கும். கண் எதிரிலேயே தட்டில் இருந்த காபி மாயமாய் மறைந்தததை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:

 

 தட்டில் எரியும் மெழுகு வர்த்தியை கண்ணாடி கிளாசால் மூடிவிடுவதால் காற்று இல்லாமல் மெழுகு வர்த்தி அணைந்து அங்கே காற்றில்லாத வெற்றிடத்தை உருவாக்கிடும். அப்போது வெளியில் இருக்கும் காற்றை கண்ணாடி டம்ளரில் காற்றில்லா வெற்றிடம் உறியத்தொடங்கும் அப்போது காற்றுடன் காபியும் கண்ணாடி டம்ளருக்கும் சென்றுவிடும் இது தான் சீக்ரெட். கண்ணாடி டம்ளருக்குள் சென்ற காபியை காசு குடித்துவிட்டதாக நீங்கள் கதைவிடவேண்டும் அதான் இந்த மேஜிக்கின் சாமர்த்தியம்!

No comments:

Post a Comment