Thursday, 20 February 2014

52. மாயமாகும் ஓட்டை!





தேவையான பொருள்:

 

 காகிதம்


செய்முறை:

 

நீள் சதுர காகிதத்தை எடுத்து, இரண்டாக மடிக்கவும், அடுத்த அதை இரண்டாக மடிக்கவும். இப்போது சதுர வடிவில் இருக்கும் காகிதத்தை பார்வையாளர்களிடம் காட்டி, அதன் ஒரு முனையை சிறிது கிழித்து கிள்ளி எடுக்கவும். கிள்ளி எடுக்கப்பட்டதுடன் காகித சதுரத்தை பார்வையாளர்களிடம் காட்டி,"" இந்த காகிதத்தில் ஒரு முனையை கிள்ளி எடுத்துவிட்டேன். இதனால் காகிதத்தில் நடுவில் ஓட்டை விழும் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு, காகிதத்தை விரித்துக்காட்டுங்கள். காகிதத்தின் நடுவில் ஓட்டை இருக்கும்.
பிறகு, இன்னொரு காகிதத்தை எடுத்து முன்பு போலவே இரண்டாக மடிக்கவும். அடுத்தும் இரண்டாக மடித்து அதன் ஒரு முனையை சிறிது கிழித்துவிட்டு, கிள்ளி எடுத்துவிடவும். பின்னர் பார்வையாளர்களிடம், "" இந்த காகிதத்தில் கிள்ளி எடுத்த பகுதியில் ஓட்டை விழாமல் இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு காகிதத்தை விரித்து காட்டுங்கள்! காகிதத்தின் நடுவில் ஓட்டை இல்லாதிருப்பது கண்டு பார்ப்பவர்கள் ஆச்சரியமடைவார்கள்!

மேஜிக் சீக்ரெட்: 

 

நான்காக மடிக்கப்பட்ட காகிதத்தில் ஒரு முனையை சிறிய அளவு கிழிக்கும் போதே, அதை இடது கை ஆள்காட்டி விரலால் பின்பக்கமாக மடித்து கொள்ளவும். ஆனால்வலது கை விரலால் கிள்ளி எறிந்தது போல பாவனைக்காட்டவும். இது தான் மேஜிக் சீக்ரெட்!


No comments:

Post a Comment