Thursday 20 February 2014

46 . பெரிது சிறிதாகும்; சிறிது பெரிதாகும் மேஜிக்





தேவையானப்பொருட்கள்:

 

தடிமனான இரு அட்டை. ஸ்கெட்ச் பென், ஸ்கேல், பேப்பர்

செய்முறை:

 

சம அளவில் இரு கோடுகள் வரைந்து கொள்ளவும். இருகோடுகளுக்கு வேறு வேறு வண்ணம் தீட்டவும். 1 முதல் கோட்டுக்கு "எ' என்றும் 2 வது கோட்டுக்கு "பி ' என்று குறிப்பிடவும். படத்தில் உள்ளது போல 1 வது கோட்டின் இரு முனைகளில் விரிந்திருக்கும்படி ஆரோ வரையவும். 2 வது கோட்டின் இருமுனையிலும் குவிந்திருக்கும் ஆரோ வரையவும். இரண்டையும் உங்கள் நண்பர்களிடம் காட்டி "" இதில் எ கோடு நீளமா? பி கோடு நீளமா'' என்று கேளுங்கள். அவர்கள் எல்லாரும்' ' தான் நீளமான கோடு என்பார்கள். அதுபோல "இதில் எந்த கோடு சிறியது?'' என்று கேளுங்கள் "பி' கோடுதான் சிறியது என்பார்கள். நீங்கள் இருபதிலுமே தவறு. இந்த இரு கோடுகளும் சம நீளம் கொண்டவை என்று சொல்லிவிட்டு இருகோடுகளில் உள்ள அம்பு குறிகளை மறைத்து கிடைமட்ட கோட்டை மட்டும் காட்டுங்கள். இரண்டு கோடுகளும் சம அளவில் இருப்பதை பார்த்து வியப்பார்கள்.

மேஜிக் சீக்ரெட்:


முதல் கோட்டில் போடப்பட்டுள்ள அம்பு குறி விரிந்த நிலையில் இருப்பதால் நீளமானது போல மாய தோன்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. 2 வது கோட்டில் உள்ளடங்கிய அம்பு குறி அமைப்பு நீளம் குறைவான போல மாய தோற்றத்தை தந்துவிடுகிறது. இதில் பார்வையை கிடைமட்ட கோட்டில் கூர்ந்து கவனம் செலுத்தினால் இரண்டு கோடுகளும் சமமானதுதான் என்பது விளங்கும்.



No comments:

Post a Comment