Thursday 20 February 2014

37 . காலி பாட்டிலில் பால் மேஜிக்!






தேவையானப்பொருட்கள்:

 

 பால் பாட்டில், பால்


செய்முறை:


சிவப்புநிற பாட்டிஎடுத்து டேபிளில் வைக்கவும். அதில் பார்வையாளர்கள் முன்பாக பாலை ஊற்றவும். பிறகு, அந்தப் பாட்டிலில் இருந்து பாலை ஒரு டம்ளரில் வடிக்கட்டவும். முழுவதும் பால் வடிந்தப்பிறகு, காலியான பாட்டிலை தலைகீழாக கவிழ்த்து பாட்டிலில் சொட்டு பால்கூட இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். அதை அப்படியே சிறிது நேரம் கையில் வைத்திருங்கள். பிறகு உள்ளங்கையில் வைத்து குலுக்கவும். பாட்டிலை அப்படியே பார்வையில் கூர்மையாக பார்த்துக்கொண்டிருங்கள். பிறகு, பாட்டிலை வாய்ப்பக்கம் கொண்டு வந்து, பாட்டிலே ! பாலைக்கொட்டு! என்று சொல்லிவிட்டு பாட்டிலை தலைகீழாக கவிழுங்கள். பாட்டிலிருந்து பால் கொட்டும்! இதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்!

மேஜிக் சீக்ரெட்:

 

இந்த மேஜிக் செய்யும் முன்பாக பாட்டிலில் கால் பாகம் பாலை ஊற்றி, பிரிட்ஜில் ப்ரீசரில் வைத்து, பால் கட்டியாக ஆகும் வரை வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாட்டில் கலர் சிவப்பு என்பதால் பால் கட்டியாக உறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. அதில் பாலை ஊற்றி வடிக்கட்டியதும், தலைக்கீழாக கவிழ்த்தாலும் உறைந்த பால்கட்டி கீழே விழாது. உள்ளங்கையில் வைத்து தேய்க்கும் போது உறைந்திருக்கும் கட்டி உருகிவிடும். இப்படி முழுவதும் உருகியதும் கவிழ்த்தால் பால் பாட்டிலிருந்து கொட்டும். இதில் ஹைலைட் பால் ஐஸ் ஆகி இருப்பதுதான்!


No comments:

Post a Comment