Thursday, 20 February 2014
47 . மாயமாய் மறையும் காசு!
25 பைசா காசு
பார்வையாளர்களிடம் <உங்கள் இருகைகளையும் படம் 1 உள்ளது போல விரித்து காட்டுங்கள். "" கையில் எதாவது இருக்கிறதா?'' என்று கேட்கவும். அவர்கள் ஒன்றுமில்லை என்பர். பின்னர் படம்2 இருப்பது போல புறங்கையை காட்டுங்கள். ""இப்போதும் கையில் எதாவது உள்ளதா'' என கேட்கவும். பதில் இல்லை என்றுதான் வரும். பிறகு அப்படியே இருகைகளின் விரல்களை மடக்கிக்கொள்ளவும். முதலில் இடது கை விரல்களை விரியுங்கள்."" உள்ளங்கையில் எதாவது இருக்கிறது?'' என்று கேளுங்கள். அவர்கள் ஒன்றுமில்லை என்பர். அடுத்து, வலது உள்ளங்கை விரங்களை விரியுங்கள். உள்ளங்கையில் 25 பைசா காசு இருக்கும். அதைப்பார்த்து பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
இந்த மேஜிக் ஒரு தந்திர வித்தை. மேஜிக் செய்யும் முன் ஆள்காட்டி விரல், நடுவிரலுக்கு இடையில் 25பைசாவை வைத்து அதன் விளிம்பு பகுதியில் இறுக்கமாக அணைத்துக்கொள்ளவேண்டும்.இப்போது காசு புறங்கை பக்கம் நீண்டு இருக்கும். நீங்கள் காட்ட வேண்டிய பகுதி உள்ளங்கை பக்கம். புறம் கையை திருப்பும்போது லாவகமாக விரல்களை மெல்ல விலக்கி காசை உள்பக்கம் கொண்டுவந்துவிடவேண்டும். இப்போது காசு உள்ளங்கை பக்கம் நீண்டு இருக்கும். இப்போது நீங்கள் காட்டுவது புறங்கை பக்கம். புறங்கையை மடக்கும் போது விரலுக்கு இடையில் உள்ள காசை உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிடவேண்டும்.
Labels:
மேஜிக் மேஜிக்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment