தேவையான பொருட்கள்
தண்ணீர், தண்ணீர் பாட்டில்,
காபி துõள், ஒயிட் நெயில் பாலீஷ்
செய்முறை:
ஒரு காலி பாட்டில் நண்பர்களிடம் காட்டுங்கள். அவர்கள் எதிரிலேயே
அதில் பாதியளவு தண்ணீரை ஊற்றுங்கள். அதை நண்பர்களிடம் காட்டுங்கள். ""
இந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீர் இப்போது மேஜிக் காபியாக மாறும். பாருங்கள்'' என்று சொல்லி
விட்டு, பாட்டிலை தலைகீழாக
சில நிமிடங்கள் கவிழ்துக்கொள்ளவும். பிறகு,
பாட்டிலை நன்றாக குலுக்குங்கள்! நீங்கள் பாட்டிலை குலுக்க
குலுக்க தண்ணீர் கொஞ்ச கொஞ்சமாக காபியாக மாறும். மூடியைத்திறந்து அந்த காபியை
முகர்ந்து பார்க்கச் சொல்லுங்கள். காபி மணம் இருக்கும். பருகினாலும் காபி ருசியாக
இருக்கும். இந்த மேஜிக் காபியை பார்த்து நண்பர்கள்
அசந்துபோவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்பாக காபித்துõளை தண்ணீரில்
குழைத்து கெட்டியாக பாட்டில் மூடியில் கால் வாசி உள்ளே பூசுங்கள். பிறகு வெயிலில்
நன்றாக உலரவிட்டு, அதன் முகப்பகுதியில் ஒயிட் நெயில் பாலீசை மேற்பரப்பில் பூசுங்கள்.
இப்படி செய்தால் காபி துõள் இருப்பதாகவே தெரியாது. இயல்பான மூடி போலவே தெரியும்.
பாட்டிலில் தண்ணீரை நிரப்பி குலுக்கும் போது மூடியில் உள்ள காபி
துõள் கரைந்து
தண்ணீரில் கலக்கும் போது காபியாக மாறிவிடும்! இதில் மூடியில்
மறைக்கப்பட்டிருக்கும் காபிதுõள் தான் சீக்ரெட்! இந்த ரகசியம் தெரியாத வரை மேஜிக் வெற்றிதான்!
No comments:
Post a Comment