! இந்த வாரத்திற்கான மேஜிக் கணக்கு
நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாட.
=========================================================
உங்கள் வீட்டில் கூட்டல் கணக்குபோடத் தெரிந்த
சிறிய குழந்தைகள் உண்டா?
அவர்களுடன் கணக்கில் ஒரு மேஜிக் செய்யலாம்
நீங்க.
முதலில் துண்டு பேப்பர்களிலோ அல்லது
ஸ்லேட்டிலோ அல்லது பழைய எழுதாத டயரிகளிலோ கீழ்க்கண்ட
ஸ்டாண்டார்ட் சார்ட் போட்டுக்கொள்ளுங்கள்:
Operation
No. 1 நீ YOU
……..
Operation
No. 3 நீ YOU
………
Operation
No. 4 நான் I
………
Operation
No. 5 நீ YOU
……..
Operation
No. 6 நான் I
……..
======================================
Operation
No. 2 நான் I [Total]
. ……..
======================================
நீ ”YOU” என்றால் உங்கள் குழந்தை.
நான் ” I” என்றால் நீங்கள்.
Operation
No. 1, நீ ’YOU’ என்று இருப்பதால் முதலில் நம் குழந்தை
நம்மிடம் ஏதாவது ஒரு நம்பர் சொல்ல வேண்டும். அது எவ்வளவு ஸ்தான (Digit) நம்பராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
[ஆனால் ஒரு கண்டிஷன் சொல்லி விடவும். அதாவது
முதலில் 4
ஸ்தான நம்பர் சொன்னால், அதன் பிறகு அதற்கு மேற்பட்ட ஸ்தான நம்பர்கள்
சொல்லக்கூடாது என்று சொல்லி விடவும்.]
உதாரணமாக 1008 என்று குழந்தை முதன் முதலாகக் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அந்த 1008 என்ற நம்பரை Operation No.1 க்கு எதிராக குழந்தையை விட்டே
எழுதச்சொல்லவும் / அல்லது நீங்களே எழுதவும்.
இவ்வாறு Operation No. 1 க்கான நம்பர் குழந்தை கூறியவுடன், Operatrion No. 2 என்ற இடத்தில் மொத்தக்கூட்டுத்தொகை [அதாவது Total Summation] இந்தக் கூட்டல் கணக்குக்கு எவ்வளவு வரும்
என்று நீங்கள் போட்டுவிட வேண்டும். பிறகு கூட்டிப்பார்க்கும் போது அந்தக்குழந்தை
மிகவும் ஆச்சர்யப்படும்.
1008
என்று சொன்னதும் நீங்கள் Operation No. 2 என்ற இடத்திற்கு நேராக 21006 என்று உடனே மின்னல் வேகத்தில் கூட்டுத்தொகையை
எழுதிவிட வேண்டும். இது எப்படி என்றால்: குழந்தை சொன்ன 1008 minus 2 = 1006 அல்லவா? இந்த 1006 க்கு முன்பாக அந்தக்கழித்த 2 என்ற
எண்ணைப் போட்டால் என்ன வரும்? 21006 அல்லவா! இது
தான் நாம் செய்ய வேண்டிய முதல் மேஜிக்.
Examples::
Operation
No. 1 = 9 என்றால்
Operation
No. 2 = (9-2 =7), So we have to write 27
Operation
No. 1 = 21 என்றால்
Operation
No. 2 = (21-2 =19), So we have to write 219
Operation
No. 1 = 101 என்றால்
Operation
No. 2 = (101-2 =099), So we have to write 2099**
Operation
No. 1 = 555 என்றால்
Operation
No. 2 = (555-2 =553), So we have to write 2553
If
Operation No. 1 is in 1 digit, Operation No. 2 should be in 2 digit
If
Operation No. 1 is in 2 digit, Operation No. 2 should be in 3 digit
If
Operation No. 1 is in 3 digit, Operation No. 2 should be in 4 digit
If
Operation No. 1 is in 4 digit, Operation No. 2 should be in 5 digit
If
Operation No. 1 is in 5 digit, Operation No. 2 should be in 6 digit
For
example, If Operation No. 1 is told by the child as 101 (3 digit),
our
Operation No. 2 should be in 4 digit as 2099 and NOT to be written as
299.
**We
have to be very careful in this only one aspect.
சில குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாகவோ
அல்லது விளையாட்டாகவோ கூட,
முதன் முதலாக Operation No. 1 க்கு அவர்கள் கூறும் எண்ணை 2 அல்லது 1 அல்லது 0
என்று கூறிவிடும்.
2
என்றால் அதிலிருந்து 2 ஐக்கழித்து 2ஐ முன்னால் போட்டு 20
என்று நீங்கள் விடையை Operation No. 2 க்கு எதிராக எழுதி விடுவீர்கள்.
1
என்றாலோ 0 என்றாலோ,
அதிலிருந்து 2 ஐக்கழிக்க முடியாதே!என்னசெய்வது? என்று கவலைப்படாதீர்கள்.
1
என்றால் 19 என்றும்,
0
என்றால் 18 என்றும்
விடையை எழுதிவிடுங்கள்.
இது வரை புரிந்து கொண்டீர்களா?
-o-o-o-o-o-
OK
…… NOW LET US GO TO THE NEXT STEP:
இப்போது Operation No. 3 என்ற இடத்திற்கு உங்கள் குழந்தை ஒரு நம்பர்
சொல்ல வேண்டும். Suppose
5863 என்று
சொல்வதாக வைத்துக்கொள்வோம்.
இப்போது Operation No. 4 க்கு எதிராக நீங்கள் மின்னல் வேகத்தில் ஒரு
நம்பர் எழுத வேண்டும். குழந்தை சொன்ன 5863 க்கு நீங்கள் எழுத வேண்டிய மேஜிக் நம்பர் 4136.
இதை எப்படிக்கொண்டு வருவது என்று நீங்கள்
கேட்கலாம். 4 ஸ்தான மிகப்பெரிய எண்ணான 9999 லிருந்து குழந்தை சொன்ன 5863 ஐ மனதால் கழித்து 4136 என்று எழுதிவிடணும். அது தான் இதில் உள்ள
மேஜிக்.
அதாவது குழந்தை சொல்லும் ஒவ்வொரு ஸ்தான
எண்ணையும் 9
ஆல் மனதுக்குள் கழித்து, நாம் நம் நம்பரைப்போட வேண்டும்.
குழந்தை போட்டது 5555 என்றால் நாம் 4444 போடணும்.
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்.
குழந்தை போட்டது 1234 என்றால் நாம் 8765 போடணும்
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்
குழந்தை போட்டது 6633 என்றால் நாம் 3366 போடணும்
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்
குழந்தை போட்டது 4000 என்றால் நாம் 5999 போடணும்
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்
நீங்கள் குழந்தைக்கு நேரில் ஒவ்வொரு எண்ணாக 9 லிருந்து யோசித்துக் கழித்துக்
கொண்டிருக்காமல்,
மனதாலே டக் டக்கென்று மின்னல் வேகத்தில்
கழித்து எழுதிவிட வேண்டும்.
இதுவரை O K தானே?
இதே டெக்னிக் தாங்க குழந்தை சொல்லும் Operation No. 5 க்கும், நாம் எழுத வேண்டிய Operation
No. 6 க்கும்.
Suppose
குழந்தை Operation 5 க்கு 4849 என்று சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் மின்னல் வேகத்தில் எழுத வேண்டிய
Operation
6 க்கான எண் 5150 (அப்போ தானே 4849+5150=9999 வரும்)
மேஜிக் ஓவர். இப்போ கூட்டிப்பாருங்கள். Operation No. 2 க்கு எதிராக நாம் ஏற்கனவே எழுதியுள்ள விடை
மிகச்சரியாக வந்து நிற்கும்.
1008
5863
4136
4849
5150
=====
21006
=====
முதலில் குழந்தை 1008 என்று சொன்னதுமே, நாம் விடை 21006 என்று எழுதி விட்டோம்.
பிறகு குழந்தை 5863 என்றது. நாம் 4136 என்று எழுதி விட்டோம்
பிறகு குழந்தை 4849 என்றது. நாம் 5150 என்று எழுதி விட்டோம்.
இப்போது கூட்டிப்பார்த்தால் நாம் முதலிலேயே
எழுதி வைத்த விடை 21006
சரியாக வருகிறது பாருங்கள். உங்களில்
சிலருக்கே இது என்ன மேஜிக் ஆக உள்ளதே என்று தோன்றும் போது உங்கள் குழந்தைக்கு
எவ்வளவு ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்?
===================oOo====================
மிகவும் சின்னக்குழந்தைகளாக இருந்தால் ஒரு
ஸ்தான நம்பர் சொல்லச்சொல்லுங்கள். அப்போது தான் அவர்களால் தவறேதும் இல்லாமல் விரல்
விட்டுக் கூட்டி சரிபார்க்க முடியும்.
உதாரணமாக
உதாரணமாக
7
(இது
குழந்தையின் நம்பர் against
Operation No. 1)
3
(இது
குழந்தையின் நம்பர் against
Operation No. 3)
6
(இது நாம்
எழுதும் மேஜிக் நம்பர் against
Operation No. 4)
[ 9 minus 3 = 6 ]
4
(இது
குழந்தையின் நம்பர் against
Operation No. 5)
5
(இது நாம்
எழுதும் மேஜிக் நம்பர் against
Operation No. 6)
[ 9 minus 4 = 5 ]
===
25
(இது நாம் எழுதும் விடை against Operation No.
2)
(7 minus 2 = 5; So we write 25)
(7 minus 2 = 5; So we write 25)
===
===================oOo====================
நீங்கள் முதலில் நன்றாகப்புரிந்து கொண்டு, குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
இதனால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு!
கூட்டல் கணக்குக்குப் பாடம்
கற்றுக்கொண்டதாகவும் ஆச்சு!!
நேரம் நல்ல பயனுள்ள முறையில் செலவழிந்ததாகவும் ஆச்சு!!!
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
குழந்தைக்கும்.
ALL
THE BEST.
No comments:
Post a Comment