Thursday 20 February 2014

66 . மேஜிக் தீக்குச்சி!





தேவையான பொருட்கள்:
தீப்பெட்டி, மெழுகு வர்த்தி, ஸ்கெட்ச் பென், கட்டர்.

செய்முறை:
ஏற்கெனவே எரிந்து ஒரு தீக்குச்சியை எடுத்து, அதை பார்வையாளர்களிடம் காட்டி, "" இது ஏற்கெனவே பற்றவைக்கப்பட்ட தீக்குச்சி. இந்தக்குச்சியை தீப்பெட்டியில் மீண்டும் உராய்ந்தால் எரியும் பாருங்கள்!'' என்று கூறி, அந்தக் குச்சியை மெழுகில் தோய்த்து எடுத்து, பின்னர், அந்தக் குச்சியை தீப்பெட்டியில் உரசுங்கள் சட்டென்று அது எரியும். இதெப்படி சாத்தியம்? எரிந்த குச்சி மீண்டும் எரிகிறதே! என்று ஆச்சரியப்படுவார்கள்!

மேஜிக் சீக்ரட்!

இது பார்வையாளர்களை ஏமாற்றும் தந்திரவகை மேஜிக்! இந்த மேஜிக்கை சாமார்த்தியமாக செய்யவேண்டும்.
மேஜிக் செய்வதற்கு முன்பாக, தீக்குச்சிகளை எடுத்து, படத்தில் காட்டியபடி தீக்குச்சியின் கந்தக தொப்பிக்கு கீழே ஒரு சென்டி மீட்டர் நீளம் சுற்றிலும் கட்டரால் சீவிக் கொள்ள வேண்டும். அதாவது எரிந்த தீக்குச்சி முனை எப்படி மெல்லியதாகவும், அடிபாகம் தடிமனாக இருப்பது போல சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் கந்தகத் தொப்பியில் இருந்து சீவிய நீளம் வரை கறுப்பு ஸ்கெட் பென்னால் கறுப்பு வண்ணம் தீட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தப்பின் தீக்குச்சியைப் பார்த்தால் எரிந்த தீக்குச்சி போலவே தோற்றமளிக்கும். இந்தக்குச்சியை தீப்பெட்டியில் உரசும்போது தீக்குச்சியில் இருக்கும் கந்தகம் எரியும். பார்வையாளர்களை குழப்புவதற்குத் தான் மெழுகு தோய்த்துக்கொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment