Thursday 20 February 2014

59 . கண் பார்வையில் வளையும் ஸ்பூன்!



தேவையான பொருட்கள்:
ஒரு ஸ்பூன், நிக்கல் வில்லை அல்லது 25 காசு

செய்முறை:
நேராக இருக்கும் ஒரு ஸ்பூனை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டவும். அதை டேபிளில் செங்குத்தாக குத்தி அது வளைக்க முடியாதபடி தடிமனாக இருப்பதை உணர்த்துங்கள். பிறகு, ஸ் பூனை படத்தில் காட்டியபடி உள்ளங்கையில் வைத்துக்கொள்ளவும். உள்ளங்கையில் இருக்கும் ஸ்பூனை கொஞ்ச நேரம் அப்படியே உற்றுப் பார்த்துக்கொண்டே, "" இந்த ஸ்பூனை என் கண் பார்வையால் வளைத்துக்காட்டுகிறேன்'' என்று சொல்லி உள்ளங்கையை படம்2, படம் 3 ல் காட்டியபடி திருப்புங்கள். இப்போது ஸ்பூன் வளைந்த தோற்றத்தில் இருப்பதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்.

மேஜிக் சீக்ரட்:

தந்திரமாக ஏமாற்றும் வித்தை தான் இந்த மேஜிக்! ஸ்பூனை உள்ளங்கையில் வைக்கும் போது கட்டை விரல் முனை,ஆள்காட்டி விரல் முனையில் நிக்கல் வில்லை அல்லது 25 காசை படத்தில் இருப்பது போல வைத்துக்கொள்ளவும். இது பார்வையாளர்களுக்கு ஸ்பூனின் காம்பு முனை போல தோன்றும்.
பிறகு, ஸ்பூனின் காம்பை கொஞ்சம் கொஞ்சமாக சுண்டு விரல் இடத்திலிருந்து சாய்வாக நகர்த்திக்கொண்டே கட்டை விரல் பக்கம் கொண்டு வந்து கை மணிக்கட்டை சாய்வு கோணத்தில் திருப்பினால், ஸ்பூன் தலைப்பகுதி வளைந்து இருப்பது போல தோன்றும். இதில் ஸ்பூனை உள்ளங்கøயில் சாய்வாக நகர்த்துவதுதான் மேஜிக் சீக்ரட்!


No comments:

Post a Comment