Thursday 20 February 2014

63. தண்ணீரில் எரியும் விளக்கு!



தேவையான பொருட்கள்:
புது பேட்டரி2, சூடம், நுõல், அகல் விளக்கு

செய்முறை:
பார்வையாளர்கள் முன்பாக ஒரு அகல் விளக்கில் தண்ணீரை ஊற்றவும். பின்னர், அதில் ஒரு திரி நுõல் போடவும். அடுத்து, தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சி எடுத்து பற்ற வைத்து, "" இப்போது இந்த அகல் விளக்கில் இருக்கும் தண்ணீரில் தீபம் எரியும் பாருங்கள்'' என்று சொல்லி, விளக்கில் இருக்கும் திரி நுõலில் பற்றவைக்கவும். பற்ற வைத்து சில நிமிடங்கள் தண்ணீரில் தீபம் எரியும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:

இந்த மேஜிக் செய்யும் முன்பு தண்ணீரில் இரண்டு புது பேட்டரிகளை போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து, சூடத்தை பவுடராக்கி அதில் திரி நுõலை புரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது பேட்டரி ஊற வைத்த தண்ணீரை அகலில் விட வேண்டும். இந்த தண்ணீர் சாதாரண தண்ணீர் போலதான் இருக்கும். எந்த வேறு வாசனையும் இருக்காது. அதனால் பார்வையாளர்களுக்கு எந்த சந்தேகமும் வராது. திரிநுõலில் சூடப்பவுடர் ஒட்டிக் கொண்டிருப்பதால் பற்ற வைத்தவுடன் திரி நுõல் எரிய ஆரம்பிக்கும். பேட்டரியின் எரிசக்தி தண்ணீரில் கலந்து இருப்பதால் திரி சிறிது நேரம் எரியும். இதை டெக்னிக் பின்புலத்தில் தண்ணீரில் எரியும் தீபம் என்று"கப்சா' விட்டு சாமாளிப்பது உங்கள் சாமர்த்தியம்!


No comments:

Post a Comment