தேவையானப் பொருட்கள்:
இரண்டு பலுõன், சிறிது மண்ணெண்ணை, கொஞ்சம் பஞ்சு அல்லது காட்டன் துணி
செய்முறை:
முதலில் இரண்டு பலுõன்களையும்
ஊதிக்கொள்ளவும். அடுத்ததாக, பஞ்சில் கொஞ்சம் மண்ணெண்ணையை நனைத்துக்கொள்ளவும். ஒரு பலுõனை உங்கள்
நண்பரிடம் கொடுங்கள்.
இன்னொரு பலுõனை நீங்கள் கையில் வைத்து கொள்ளவும். இப்போது உங்கள் நண்பர் கையில் உள்ள பலுõனை மேஜிக் மூலம் வெடிக்கச் செய்கிறேன் என்று சொல்லி உங்கள் கையில் இருக்கும் பலுõனை அப்படியே சில வினாடிகள் உற்று பாருங்கள். உங்கள் நண்பர் கையில் இருக்கும் பலுõன் "பட்டென்று' வெடிக்கும். இந்த விந்தையைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக்கின் சீக்ரெட் மண்ணெண்ணை. பலுõனில் தெளிக்கும் மண்ணெண்ணை பலுõன் ஊதப்படும் போது காற்றால் நிறைகிறது. அப்போது மண்ணெண்ணையில் உள்ள வேதிப்பொருள் ரப்பருடன் வேதிவினை புரியும் போது சூடு ஏற்பட்டு ரப்பர் இளகும். இளகிய இடத்தில் காற்று வெளியேற முயலும் போது பலுõன் வெடிக்கும்.
மேஜிக் செய்யும் முன் எந்த பலுõனை வெடிக்கச் செய்ய வேண்டுமோ அந்த பலுõன் மீது யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணையை தடவிவிட வேண்டும். இந்த தந்திரம் தான் மேஜிக்கின் ஹைலைட் ஆகும்.
No comments:
Post a Comment