Thursday, 20 February 2014

54. பத்து ரூபாய் பிட்டிங் மேஜிக்!





தேவையான பொருட்கள்:

 

பத்து ரூபாய் பணம் இரண்டு

செய்முறை:

 

 பத்து ரூபாய் பணத்தை நெடுக்கு வசத்தில் படத்தில் உள்ளது போல மடித்துக்கொள்ளவும். அதே போல் இன்னொரு பணத்தையும் நெடுக்கு வசத்தில் மடித்துகொள்ளவும்.
பிறகு, படத்தில் காட்டியவாறு முதல் பத்து ரூபாயை நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்டதை சரிபாதியாக மடிக்கவும்.
நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில், சரி பாதியாக மடிக்கப்பட்ட பணத்தை நுழைக்கவும். பிறகு, பார்வையாளர்களிடம் படத்தில் காட்டியவாறு நன்றாக இழுத்துக்காட்டவும்.
சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில் இருந்து வெளியே வராது.
பின்னர் நெடுக்கு வசத்தில் உள்ள பணத்தின் இரு முறையிலும் கை இருவிரலை வைத்து அடைத்துக்கொண்டு சரிபாதியாக உள்ள பணத்தை"வந்துடு வந்துடு வெளியே வந்துடு...' என்று சொல்லிவிட்டு இழுக்கவும். சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் வெளியே வந்து விடும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.



No comments:

Post a Comment