Thursday, 20 February 2014
45 . வெட்டிய படம் ஒன்று சேர்க்கும் மேஜிக்
மடிக்கப்பட்ட ஒரு பேப்பரை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டுங்கள். அடுத்து ஒரு சிறுமி படத்தை எடுத்து பார்வையாளர்கள் கண் முன்பாக அதை மடிக்கப்பட்ட தாளில் உள்ளே செலுத்துங்கள். பின்னர் கத்திரி கோலால் குறுக்கு வசத்தில் வெட்டுங்கள். "" இந்த பேப்பரில் இருக்கும் சிறுமி படத்தையும் சேர்த்து தான் வெட்டுகிறேன். ஆனால் இந்த மேஜிக் கத்திரிகோலால் சிறுமி படம் வெட்டப்பட்டாலும் உடனே ஒன்று சேர்ந்துவிடும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு பாதியாக வெட்டிய பேப்பரை விலக்கி விட்டு, உள்ளே சிறுமி படத்தை வெளியே எடுத்துக்காட்டுங்கள். சிறுமி படம் குறுக்கே வெட்டப்படாமல் இருப்பது கண்டு எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்.
Labels:
மேஜிக் மேஜிக்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment