Thursday 20 February 2014

53. தண்ணீரில் காசு முளைக்கும்!




தேவையான பொருட்கள்:

 

 50 காசு, தண்ணீர் கிளாஸ், கைக்குட்டை

செய்முறை:

 இடது கை உள்ளங்கையை விரித்துக்காட்டி கையில் காசு இல்லை என்பதை பார்வையாளர்களிடம் தெளிவுபடுத்தவும். பிறகு ஒரு கை குட்டையை எடுத்து நன்றாக உதறி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவுபடுத்தவும். அடுத்து, ஒரு தண்ணீருடன் உள்ள கிளாசை காட்டி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவு படுத்தவும்.
பின்னர், இடது உள்ளங்கையில் தண்ணீர் கிளாசை வைக்கவும். தண்ணீர் கிளாசின் மீது கைகுட்டையை போட்டு மூடவும். பார்வையாளர்களிடம், "" இப்போது கைகுட்டை எடுத்தால் தண்ணீர் கிளாசில் காசு இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லி விட்டு கைகுட்டையை எடுங்கள். தண்ணீர் கிளாசை காட்டுங்கள் அதில் காசு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்!


மேஜிக் சீக்ரெட்:


இந்த மேஜிக் மிக தந்திரமாக செய்து பார்வையாளர்களை ஏமாற்றக்கூடிய மேஜிக் என்பதால் நீங்கள் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். மேஜிக் செய்வதற்கு முன்பு இடது கையின் நடுவிரல், மோதிர விரலுக்கு இடையில் காசு வைத்து காசின் விளிம்பு கால் பகுதி மட்டும் விரல் இடுக்கில் வைத்து மறைத்து கொள்ள வேண்டும். இப்படி மறைத்து வைக்கும் காசு புறங்கை பக்கம் தான் 90 சதவீதம் இருக்கும். உள்ளங்கை பக்கம் தெரியாது.உள்ளங்கையில் கிளாசை வைத்து, அதன் மீது கைகுட்டையை மூடிவிட்டு, விரல் இடுக்கில் இருக்கும் காசை புறங்கை பக்கத்திலிருந்து வலது கையால் தள்ளி, உள்ளங்கைக்கு கொண்டு வந்து, காசின் மீது கிளாஸ் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். கண்ணாடி கிளாஸ் என்பதால் அடியில் இருக்கும் காசு கண்ணாடி கிளாசில் இருப்பது போல பிம்பத்தைத் தரும். மறைத்திருக்கும் காசை, கண்ணாடி கிளாசின் அடியில் கொண்டுச் சேர்ப்பதுதான் மேஜிக் சீக்ரெட்!



No comments:

Post a Comment