Thursday 20 February 2014

50 . பென்சில் மேஜிக்





தேவையான பொருட்கள்:

 

பென்சில்
செய்முறை: 


பார்வையாளர்களிடம் கை விரித்து காட்டுங்கள். பிறகு இருகையும் சேர்த்து கை தட்டுங்கள். பின்னர், ஒரு பென்சிலை எடுத்துக்காட்டுங்கள். ""இந்த பென்சில் இப்போது எந்தபிடிமானமும் இல்லாமல் உள்ளங்கையில் நிற்கும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு பென்சிலை உள்ளங்கையில் வைத்து இறுக்கிபிடியுங்கள். பிறகு திரும்பிக்கொண்டு ஒவ்வொரு விரலாக விரியுங்கள், முடிவில் எல்லா விரலையும் விரித்துவிடுங்கள். பென்சில் கீழே விழாமல் உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:

 

வலதுஉள்ளங்கையில் பென்சிலை வைத்து அழுத்தும் போதே மெதுவாக வலது கை மணிகட்டில் இடதுகை வைத்து பிடிமானம் கொடுத்து ஆள் காட்டி விரலை மட்டும் வலது உள்ளங்கையில் உள்ள பென்சில் மேல் அழுத்திபிடித்துக்கொள்ள வேண்டும். நாம் திரும்பி நின்று மேஜிக் செய்வதால் உள்ளங்கை பகுதி தெரியாது. அத்துடன் ஆள்காட்டி விரல் பென்சிலை பிடித்திருப்பதும் தெரியாது. இது தெரியாமல் இருப்பது தான் இந்த மேஜிக்கின் ஹைலைட் சீக்ரெட்!


No comments:

Post a Comment