தேவையான
பொருட்கள்:
பிளேயிங்
கார்டு 10, கத்தரிக்கோல், பசை
செய்முறை:
படம் 1 ல் காட்டப்பட்டது போல கார்டுகளை டேபிளில் பரப்பி வைத்து கொள்ளவும். அந்த
கார்டுகளின் மீது உள்ளங்கையை அழுத்தவும். பின்னர், பார்வையாளர்களிடம், "" இப்போ, இதில் ஒரு கார்டு மூலம் இன்னொரு கார்டை என்
கை மேக்னெட்டிக் சக்தியில் எடுத்துக்காட்டு கிறேன்'' என்றுö சால்லி ஒரு கார்டை படம் 5 காட்டி உள்ளது போல எடுத்துக்காட்டினால் ஒரு கார்டு இன்னொரு கார்டை
இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கும். அந்த கார்டை கொஞ்ச நேரம் கையில் வைத்து
கொண்டுவிட்டு, அந்த கார்டை "இப்பூ' ஊதுங்கள் கார்டு கீழே விழுந்து விடும். இதை பார்த்து பார்வையாளர்கள்
ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்!
இந்த மேஜிக் செய்வதற்கு முன் படத்தில் காட்டியுள்ள வாறு ஒரு கார்டில் மத்தியில் ஒரு சதுர செ.மீ அளவுக்கு வெட்டிக் கொள்ளவும். இன்னொரு கார்டை எடுத்து அதன் மத்தியில் குறுக்கு வசத்தில் ஒரு செ.மீட்டருக்கு கொஞ்சம் அதிகமாக ஒரு கோடு கிழித்தது போல் வெட்டிக்கொள்ளவும். பிறகு படத்தில் காட்டியவாறு அந்த கோட்டு இடைவெளியில் இன்னொரு கார்டின் வெட்டிய கதவு போன்ற பகுதியை நுழைத்து பசையால் ஒட்டிக்கொள்ளவும். இந்த ஏற்பட்டினை செய்துக்கொண்டப்பின், மேஜிக் செய்யும் போது கார்டின் கதவுப் பகுதியை நடுவிரல் மற்றும் மோதிர விரலுக்கு மத்தியில் இறுக பிடித்துக்கொண்டு மெல்ல மேலே துõக்கினால் அதன் கீழ் ஒரு கார்டு ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றும். பின்னர், கார்டை ஊதும் போது நடுவிரல் மற்றும் மோதிரவிரல் பிடித்துள்ள கதவு பகுதியை உள்ளங்கை பக்கம் திரும்பிக்கொண்டு, புறங்கை பக்க வழியாக விட்டு விட்டால் கார்டு கீழே விழுந்து விடும். அந்த கார்டில் மத்தியில் கிழிக்கப்பட்டக் கோடு சட்டென்று பார்வையாளர்களுக்குத் தெரியாது. இது தான் மேஜிக் சீக்ரெட்!
No comments:
Post a Comment