தேவையான பொருட்கள்:
10 ரூபாய்
பணம்2, ஆப்பிள், கர்சீப், குத்துõசி, கத்தி
செய்முறை:
10 ரூபாயை
பார்வையாளர்களிடம் காட்டி, ரூபாயில்"மேஜிக்'
என்று எழுதி, அதையும் காட்டுங்கள். பிறகு கர்சீப்பில் பணத்தை வைத்து நான்காக
மடியுங்கள். டேபிளில் அப்படியே வைத்துவிடுங்கள்.
பிறகு, ஒரு ஆப்பிள் எடுத்து,""
கர்சீப்பில் உள்ள 10
ரூபாய் இந்த ஆப்பிளில் எடுத்துக்காட்டுகிறேன்'' என்று கூறி
ஆப்பிளை டேபிளில் வையுங்கள்.
கர்சீப்பை எடுத்து பார்வையாளர்களிடம் உதறிகாட்டுங்கள். அதில்
இருந்த பணம் மாயமாய் மறைந்திருக்கும். பிறகு,
ஆப்பிளை எடுத்து கத்தியால் வெட்டுங்கள். ஆப்பிளின் மத்தியில் 10 ரூபாய் இருக்கும்.
அதை எடுத்து அதில் எழுதியிருக்கும் "மேஜிக்' எழுத்தையும் காட்டுங்கள். பார்வையாளர்கள்
வியந்துபோவார்கள்.
சீக்ரெட் மேஜிக்:
முன் கூட்டியே கர்சீப்பில் ஓரத்தில் ஒரு செ.மீ. அளவுக்கு மடக்கி
தைத்துக்கொள்ளவும். அதில் பணம் நுழையும் அளவுக்கு தையலைப் பிரித்துகொள்ளவேண்டும்.
குத்துõசியில் பணத்தை
இறுக சுற்றி, ஆப்பிளின் அடிபாகம் வழியாக உள்ளே நுழைத்து, பிறகு ஊசியை
மட்டும் வெளியே இழுத்துவிடவும்.
மேஜிக் செய்யும் போது கர்சீப்பில் பணத்தை வைத்து மடிக்கும் போதே
பணத்தை கர்சீப் ஓரத்தில் செருகிவிடவேண்டும். இதனால் கர்சீப்பை எடுத்து உதறும் போது
பணம் மாயமாய் மறைந்திருப்பதை பார்ப்பவர்கள் காண்பர். கர்சீப்பில் பணம் மறைத்து
வைப்பதும், ஆப்பிளில் பணம் குத்துõசியால் நுழைப்பதும் பிறருக்கு தெரியாதவரை வெற்றிதான்!
No comments:
Post a Comment