Showing posts with label நீதிக் கதைகள். Show all posts
Showing posts with label நீதிக் கதைகள். Show all posts

Monday, 17 March 2014

கூட்டு முயற்சி-நீதிக் கதைகள்

கூட்டு முயற்சி...!


கோடைக்காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப்பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்கவிடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராக பறந்தது. அது பக்கத்து நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாக பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் மேயர்.

“இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு?” எனக் கேட்டார் மேயர்.

“நான் தான்” என்றான் சிறுவன். “நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதை பறக்க வைத்தேன்” என்றான் அவன்.

“நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்று “என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும் சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.

“இல்லை நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால். “நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாக பறக்கவும் காரணம். நானில்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடில்லாமல் சுற்றி தரையில் விழுந்திருக்கும் அதை அந்த பையனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.

இப்போது, உங்களைப் பொறுத்தவரை யார் உண்மையில் காற்றாடியை பறக்க வைத்தார்?

பல சமயங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால் மட்டுமே நடந்ததாக நினைக்கின்றனர். மற்றவர்கள் இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது. ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது. ஏனெனில் கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும்போது நமக்கு சகிப்புத் தன்மை, பல விதமான சூழ்நிலைகளை கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்.

இங்கு யாரும் தனியானவர்கள் இல்லை. எனவே மற்றவர்களையும் எப்போதும் நினைவில் வையுங்கள்!

Tuesday, 18 February 2014

முட்டாள்களிடம் வாதாடுவதைவிட.




 
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.

அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது.

அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.

கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது.

‘
நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன.

கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை
வந்தது பிடிக்கவில்லை.

‘
இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன.

புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன.

நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.

அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம்,

‘
நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது.

‘
நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித்தவளை.

‘
ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

‘
இந்தக் கிணற்றைப் போன்று பல மடங்கு பெரிய நீர் நிலை.

அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.

‘
இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.

‘
இந்தக் கிணற்றைவிட மிக,மிகப் பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை ஏரித் தவளை சொல்வதை நம்பவில்லை.

‘
நண்பா நீ பொய் சொல்லுகிறாய்.எங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் வேறு எங்கும் இருக்க முடியாது’ என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,

கிணற்றுத் தவளை நம்பவில்லை.

கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து,

‘
நீ பொய்யன்,

புரட்டன்,

உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் எங்களுக்கு ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையை எல்லா கிணற்று தவளைகளும் தாக்க முயன்றன.

"
இந்த முட்டாள்களோடு இனியும் விவாதிப்பது புத்திசாலித்தனம் அல்ல" என்று நினைத்த ஏரித்தவளை உடனே கிணற்றைவிட்டு வெளியேற நினைத்தது.

அப்போது,

கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கியபோது, அதனுள் சட்டென்று தாவிச்சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது.

தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

நீதி :

முட்டாள்களிடம் வாதாடுவதை விட,அவர்களிடமிருந்து நீங்கள் ஒதுங்கிச் செல்வதே சாலச் சிறந்தது..

ஆம்,நண்பர்களே.,

முட்டாள்களிடம் விவாதிப்பதும் , தானே தலையை
சுவற்றில் முட்டிக் கொள்வதும்ஒன்றே..

ரத்தம் வருவதைத் தவிர ஒரு பலனும் இருக்காது.,