Wednesday 19 February 2014

14 .பேப்பர் மேஜிக்!





தேவையானப் பொருட்கள்:
அரை அங்குலம் நீளமுள்ள இரண்டு பேப்பர் துண்டுகள், கம்

செய்முறை:
 இரண்டு துண்டு பேப்பரைக் கொண்டு அதில் ஒன்றில் மட்டும் படத்தில் காட்டியதுப் போல கம் கொண்டு ஒன்றின் மீது ஒன்றாக சரியாக ஒட்டிக் கொள்ளவும்.

பிறகு, படம் நான்கில் உள்ளதைப் போல் மடிக்கவும், படம் 5 ல் இருப்பது போல் நமது கை கட்டை விரலில் அடங்கும் அளவிற்கு மடித்துக் கொள்ளவும்.

பிறகு, பார்வையாளர்களிடம் பேப்பரை திருப்பிக் காட்டவும். மடித்த பகுதி எக்காரணத்தைக் கொண்டும் வெளியே தெரியக்கூடாது.

இப்பொழுது பார்வையாளர்களின் முன் பேப்பரை இரண்டு துண்டுகளாக கிழித்து, முன்பு மடித்ததைப்போல் பேப்பரை மடித்து கையின் முன் ஏதோ மந்திரம் செய்வதைப் போல் செய்து, படம் 10 ல் இருப்பதைப் போல் திருப்பிக்கொள்ளவும்.

பின்னர், பார்வையாளர்களின் முன் கிழிந்த பேப்பரை பிரித்துக்காட்டவும்.

மேஜிக் சீக்ரெட்:

இது ஒருவகை தந்திர மேஜிக். மேஜிக் செய்யும் முன்பாக அந்த பேப்பரில் இன்னொரு பேப்பரை பிறருக்கு தெரியாதவாறு ஒட்டிக் கொள்ளவும். ஒட்டியப் பேப்பர் வெளியே தெரியாதவாறு மடித்துக்கொள்ள வேண்டும். கிழிக்கும் போது மேலே உள்ள பேப்பரைக் கிழிக்க வேண்டும். 

மேஜிக் செய்து முடித்தப்பிறகு, அடியில் உள்ள பேப்பரை பிரித்துக் காட்டவும்.



No comments:

Post a Comment