Wednesday, 19 February 2014

3. நிமிர்ந்து நிற்கும் கர்சீப்





தேவையான பொருட்கள்: கர்சீப், செல்லோ டேப், சைக்கிள் செயின்

செய்முறை:

 மூன்று கர்சீப்களை தனிதனியாக கயிறு போல திரித்துக்கொள்ளவும். மேஜிக் செய்யும் போது ஒவ்வொரு கர்சீப்பாக எடுத்து, வலது கையில்அடிமுனையையும், இடது கையில் மேல் முனையையும் பிடித்துக்கொள்ளவும். நண்பர்கள் முன் இடதுகை பிடித்திருக்கும் கர்சீப் முனையைவிட்டுவிடவும். சட்டென்று கர்சீப் கீழே மடிந்து விழும். இதுபோல இரண்டு கர்சீப்களை செய்துகாட்டவும். கடைசியாக ஒரு கர்சீப்பை எடுத்து,"" இதோ, இந்த கர்சீப் மேல் முனை பிடிமானத்தை விட்டுவிடுகிறேன். ஆனால் அது கீழே விழாது பாருங்கள்'' என்று சொல்லி இடதுகை பிடித்திருப்பதை விட்டுவிடுங்கள். கர்சீப் கீழே மடிந்து விழாமல் செங்குத்தாக நிற்கும். இதை பார்த்து நண்பர் ஆச்சரியப்படுவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:
 
ஒரு சைக்கிள் செயின் துண்டு ஒரு அடி நீளம் எடுத்துக்கொண்டு அதன் மேல் கர்சீப் சுற்றி, பிரியாமல் இருக்க செல்லோ டேப்பால் ஒட்டிவிடவும். இந்த கர்சீப்பை மற்ற கர்சீப்புடன் சேர்த்து வைத்து கொள்ளவும். கடைசியில் மேஜிக் செய்யும் போது சைக்கிள் செயின் உள்ள கர்சீப்கயிறை எடுத்து பக்கவாட்டு வசத்தில் பிடிமானத்தை விட்டால் மடிந்து விழும். ஆனால் செங்குத்து வசத்தில் பிடித்து கொண்டு பிடிமானத்தை விட்டால் கீழே விழாது. இதில் சீக்ரெட் சைக்கிள் செயின் பக்கவாட்டில் மட்டுமே நிமிந்து நிற்காது. நேர் வசத்தில் நிமிந்து நிற்கும். இந்த மேஜிக் செய்யும் போது கைபிடிமானத்தை விடுமுன் நேர் வசத்தில் திருப்பிக்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment