Thursday 20 February 2014

40 . மாயமாகும் கிளாஸ்!





தேவையானப் பொருட்கள்:

 

கண்ணாடி டம்ளர், பேப்பர்

செய்முறை:

 

டேபிளில் கண்ணாடி டம்ளரை ஒன்றை வைக்கவும். அந்த டம்ளரில் மேல் பேப்பரை மூடி அழுத்தவும். அப்படியே இடது புறமும் வலது புறமும் நகர்த்தவும். பின்னர், ""இந்த பேப்பரில் இருக்கும் டம்ளர் மாயமாய் போகும் பாருல்கள் என்று'' சொல்லிவிட்டு, பேப்பர் மீது கையை வைத்து அழுத்துங்கள் பேப்பரில் மறைக்கப்பட்ட டம்ளர் மாயமாய் மறைத்திருக்கும்.

மேஜிக் சீக்ரெட்:


தடிமனான பேப்பரை டம்ளரில் வைத்து அழுத்தும் போது பேப்பரில் டம்ளரின் உருவம் பதியும். அதை டேபிளில் நகர்த்தும் போது லாவகமாக டேபிளின் முனைக்கு கொண்டுவந்து டம்ளரை மட்டும் எடுத்துவிடவேண்டும். பின்னர் டம்ளர் உருவத்தில் இருக்கும் பேப்பரை கண்ணாடி டம்ளர் இருப்பது போல நகர்த்தவேண்டும். பேப்பரை கையால் அழுத்தும் போது பேப்பரில் பதிந்துள்ள உருவம் நசுங்கிவிடும். இந்த செய்கையால் பேப்பரில் மறைத்து வைக்கப்பட்ட கிளாஸ் மாயமாய் மறைந்து விட்டது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட வேண்டும்.


 

No comments:

Post a Comment