Thursday 20 February 2014

64 . வானவில் குளிர்பானம்!



தேவையான பொருட்கள்.

5
கண்ணாடி கோப்பை, ஜீனி, ஸ்பூன், குளிர்ந்த நீர், உணவு கலர் பவுடர்

செய்முறை:
5 கண்ணாடி கோப்பைகளை டேபிளில் வரிசையாக வைக்கவும். அந்தக் கோப்பைகளில் குளிர்ந்த நீரை ஒவ்வொன்றிலும் கால் பங்கு ஊற்றவும்.
பிறகு, 1ம் கோப்பையில் ஒரு ஸ்பூன் ஜீனியும், 2ம் கோப்பையில் 2 ஸ்பூன் ஜீனியும், 3ம் கோப்பையில் 3 ஸ்பூன் ஜீனியும், 4ம் கோப்பையில் 4 ஸ்பூன் ஜீனியும் போட்டு, ஸ்பூனால் ஒவ்வொரு கோப்பை தண்ணீரையும் நன்கு கலக்கவும்.
பின்னர், ஒவ்வொரு கோப்பையிலும் ஒவ்வொரு கலர் பவுடரை சேர்க்கவும். பிறகு, நன்கு கலக்கவும். இந்த ஏற்பாட்டை செய்தப்பின் பார்வையாளர்களிடம், 
""
இப்போது இந்த நான்கு கலரும் சேர்ந்து வானவில் வண்ணத்தில் குளிர் பானமாக மாறும் பாருங்கள்'' என்று கூறிவிட்டு, 5ம் கோப்பையில் முதல் கோப்பையிலிருந்து ஒரு கலர் தண்ணீரை ஒரு ஸ்பூன் எடுத்துவிடவும். 
அடுத்து, 2ம் கோப்பையிலிருந்து ஒரு ஸ்பூன் கலர் தண்ணீரும், 3ம் கோப்பையில் இருந்து ஒரு ஸ்பூன் தண்ணீரும், 4ம் கோப்பையிலிருந்து ஒரு ஸ்பூன் கலர் தண்ணீரும் எடுத்து வரிசைப்படி ஐந்தாவது கோப்பையில் விடவும்.
இப்போது 5வது கோப்பையில் அடுக்கடுக்காக வண்ணத்தில் தண்ணீர் இருக்கும். இது வானவில் வண்ணத்தில் இருக்கும். இந்தக் கோப்பையில் இருந்து தண்ணீரை பருகும் போது ஒவ்வொரு கலராக படிப்படியாக குறைவதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள்!

மேஜிக் சீக்ரட்!

நான்கு கோப்பை தண்ணீரிலும் சம அளவு ஜீனியை கலந்திருந்தால் ஐந்தாவது கோப்பையில் விடும் போது எல்லாக் கலரும் ஒன்றாக கலந்துவிடும். ஆனால், ஒவ்வொரு கோப்பையிலும் கூடுதலாக ஜீனி கலந்திருப்பதால் தண்ணீரின் அடர்த்தி, பாகு நிலை அதிகரித்திருக்கும். இதனால் ஒரு கலர் தண்ணீர் அடுக்கிலிருந்து இன்னொரு கலர் தண்ணீர் அடுக்கிற்கு சவ்வூடு பரவல் எளிதில் நடக்காது.இதன்காரணமாக ஒன்றோடு ஒன்று கலக்காமல் தனித்தனியாக இருக்கும். இது தான் மேஜிக் சீக்ரட்!


No comments:

Post a Comment