Thursday, 20 February 2014

58 .தானாக பாட்டிலுக்குள் செல்லும் காசு!



தேவையான பொருட்கள்:
கண்ணாடி பாட்டில், பேப்பர், காசு

செய்முறை:
கொஞ்சம் அகன்ற வாய் ( பாட்டில் காசு நுழையும் அளவு) உள்ள பாட்டில் எடுத்துக்கொள்ளவும். பாட்டிலின் வாய் புறத்தின் மேல் மெல்லிய பேப்பரை படத்தில் காட்டியவாறு வைக்கவும். அதன் மீது காசு வைக்கவும்.
பிறகு, பார்வையாளர்களைப் பார்த்து, "இப்போது பாட்டிலின் மேல் இருக்கும் காசு அதுவாக பாட்டிலுக்குள் விழும்' என்று சொல்லி விட்டு பாட்டிலுக்கு மிக அருகில் முகத்தை வைத்துக்கொண்டு, கண்களால் பாட்டில் மேல் உள்ள காசை உற்று நோக்கவும். சில நிமிடங்களில் திடீர் என்று காசு பாட்டிலுக்குள் சென்றுவிடும். இதைக்கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:
 இந்த மேஜிக் செய்து காட்டுவது மிக சுலபம். ஆனால், பாட்டிலில் பேப்பரை வைத்து அதன் மேல் காசு வைப்பதில் தான் கொஞ்சம் கவனம் வேண்டும். சிறு அசைவு ஏற்பட்டாலே பேப்பர் நகரும் படி அது இருக்க வேண்டும். மேஜிக் செய்யும் போது, பாட்டிலின் அருகே முகத்தை கொண்டுச் செல்லும் போது பேப்பரின் அடிபாகத்தில் படுமாறு மெல்ல அதே சமயம் தொடர்ந்து சீராக வாயினால் காற்றை ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். பேப்பர் மீது காற்று பட பட பேப்பர் மெல்ல மெல்ல நகரும். பாட்டிலின் வாய்புறத்தில் சற்று பேப்பர் நகர்ந்தாலே கனமான காசு பாட்டிலின் கீழ்நோக்கி சென்று விடும். இதில் நாம் வாயினால் காற்றை ஊதுவதை பார்வையாளர்கள் உணர்ந்து 
கொள்ளாதபடி செய்வதுதான் சீக்ரெட்!



No comments:

Post a Comment