Wednesday 19 February 2014

21 . வாயில் குடித்த பால் காதில் வழி வரும் மேஜிக்





தேவையான பொருட்கள்

பீடிங் பாட்டில் ( பால்புட்டி), பால். வொயிட் பெயிண்ட்

செய்முறை:

ஒரு பீடிங் பாட்டிலை எடுத்து நண்பர்களிடம் காட்டுங்கள். பிறகு, பீடிங்பாட்டிலில் பாதியளவு பாலை நிரப்புங்கள். அதை நண்பர்களிடம் காட்டிவிட்டு, பாட்டிலில் இருக்கும் பாலை உதட்டில் வைத்து உறிஞ்சு குடியுங்கள். பாட்டிலில் பால் தீர்ந்து போனதும், பாட்டிலை காதுபுறம் கொண்டுச் சென்று கொஞ்சம் தலையை சாயத்துக்கொண்டு,"" நண்பர்களே! இந்தப் பாட்டிலில் இருந்து குடித்த பாலை எல்லாம் இப்போது காது வழியாக கொண்டு வருகிறேன்... "வாயில் சென்ற பாலே காது வழி வந்துடு... வந்துடு... வந்துடு!' என்று சொல்லிக்கொண்டே பாட்டிலைத் திருப்புங்கள் குடித்த பால் எல்லாம் காது வழியே வந்து பாட்டில் வந்து இருக்கும். இதை பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்!

மேஜிக் சீக்ரெட்:

 இந்த மேஜிக் ஒரு தந்திரமானது. மேஜிக் செய்யும் முன் பாட்டிலில் ஒரு பக்கம் பாதியளவு வெள்ளை பெயிண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் மேஜிக் செய்யும் போது பாட்டில் இருக்கும் பாலை கொஞ்சம் குடிக்க வேண்டும். அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் மீதி பால் பீடிங் ரப்பரில் நிரம்பிவிடும். அப்படியே செங்குத்து வசத்தில் பாட்டிலை காது புறம் கொண்டு சென்று நிமிர்த்தினால் பாட்டிலில் ரப்பரில் நிரம்பிய பால் பாட்டிலில் அடித்தளத்திற்கு வரும். உடனே பாட்டிலை காதில் இருந்து எடுத்து நண்பர்களிடம் காட்டும் போது, வெள்ளை பெயிண்டிங் அடித்தப் பக்கத்தைக்காட்டுங்கள். பால் பாட்டில் முன்பு இருந்தளவே காட்டும். இதில் சீக்ரெட் பெயிண்டிங் பகுதிதான். பாலும் வெள்ளை, பெயிண்டும் வெள்ளை என்பதால் பார்வையாளர்களுக்கு பாட்டிலில் பால் பாதியளவு இருப்பதுபோலவே தெரியும்!



No comments:

Post a Comment