Friday, 14 February 2014

மழலையர் தமிழ்ப்பாடல்கள் தொகுப்பு-5


அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு!
உன்னைப் போன்ற நல்லவர்
ஊரில் எவரும் இல்லையே
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இனி இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அ’தே எனக்கு வழியாம்>>>>>>>>>>>>தமிழ்ப் பிரியன்

மழையே மழையே வா வா
மரங்கள் வளர வா வா
உலகம் செழிக்க வா வா
உழவர் மகிழ வா வா
குளங்கள் நிறைய வா வா
குடைகள் பிடிக்க வா வா
ஆறு ஓட வா வா
அடடா போட ஓடி வா>>>>>>>>>>>>தமிழ்ப் பிரியன்

1)மாங்காய் தலை முருகன்
கட்டை வண்டியில் ஏறி
சந்தை கடை சென்றான்
விதவிதமாய் கடைகள்
சந்தையிலே கண்டான்
லட்டு கடைக்குச் சென்று
லட்டு வேண்டும் என்றான்
லட்டு கேட்ட பையா
துட்டு எங்கே என்றான்
மாங்காய்தலை முருகன்
துட்டு இல்லை என்றான்
லட்டு மிட்டாய்காரன்
லட்டும் இல்லை என்றான்>>>>>>>>>>நானானி>>>>…

2)சின்ன விஜயராணி செல்ல விஜயராணி
வடைக்காகப் பாடுகிறாள்
வானம் பார்த்து சிரிக்கிறாள்
மிளகாய்த் துண்டு சிறு துண்டு
நறுக் என்று கடித்தாள்
தேம்பித்தேம்பி அழுகிறாள்
———————–
—————[கோடிட்ட இடங்களை நிரப்புங்க பார்ப்போம்]
>>>>>>>>>நானானி

No comments:

Post a Comment