Thursday, 13 February 2014

நான்கு மூடர்கள் – கதை



         காட்டிற்கு இடையே ஒரு மலை. அம்மலையில் பொன்னாக எச்சமிடுகின்ற அபூர்வ பறவை ஒன்று நெடுநாளாக வாழ்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் ஒரு வேடன் அப்பக்கம் வேட்டைக்காக வந்தான். வந்தவன் தற்செயலாக அந்தப் பறவை பொன்னாக எச்சமிடுவதை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டான். ஆஹாபொன்னையே எச்சமாக இடுகின்ற இப்படியெரு பறவையை நான் பார்த்ததில்லையே என்று ஆச்சரியம் அடைந்தான்.
வேடன்தானே. பிடிக்காமல் விடுவானா? உடனே வலையை இடம்பார்த்து விரித்தது விட்டு மறைந்திருந்தான்.வழக்கம் போல் வந்த பறவை வலையில் சிக்கிக்
கொண்டது
.
பறவையைக் கையில் பற்றிக் கொண்ட வேடன் முதலில் தன் குடிசைக்குக் கொண்டுபோக நினைத்தான். ஆனால் திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றி அவனைப் பயமுறுத்தியதோடு தயக்கமுறவும் செய்தது. இந்த பொன் எச்சமிடும் பறவை நம்மிடமிருப்பதை அரசன் அறிந்துவிட்டால்…..? பிறகு
பறவைக்குப் பறவையும் பறித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். நமுக்கும் ஒன்றும் கிடைக்காது என்று யோசித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான், ஏன் இதை நாமே கொண்டுபோய் அரசனிடம் பரிசு தருவது போல் தந்து அவர் அள்ளித்தரும் பணத்தைப் பெற்று வரக்கூடாதுய என்று.அதன்படி அவ்வேடன் அரசவைக்குச் சென்று அரசனை வாழ்த்தி, பறவையின் சிறப்பைக் கூறினான்.
பறவையை பெற்றுக் கொண்ட அரசன் பரிசைத் தந்து வேடனை அனுப்பிவிட்டு, பொன் எச்சமிடும் அபூர்வ பறவையைப் போய் சாதாரண இரும்புக் கம்பி கூண்டிலா அடைக்க முடியும். அப்பறவையை ஒரு தங்கக்கூட்டில் அடைக்கச் செய்தான்.
இச்செயல் மந்திரிக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. பறவையாவது பொன்னாக எச்சமிடுவதாவது . ஏமாற்றிவிட்டான் வேடன் என்றே அவர் கூறினார்.
எனவே அவர் அரசனிடம் அரசே பொருள் பறிக்க பொய் கூறினான் அந்த வேடன் அவன் பேச்சைக் கேட்டு ஏன் அந்தப் பறவையைக் கூட்டில் அடைக்கிறீர்கள். விட்டுவிடுங்கள் என்று கூறினார்.அரசன் உண்மையிலேயே அருளுள்ளம் கொண்டவன் மந்திரி சொன்னதும் ஒரு விநாடியும் தயங்காமல் அப்பறவையை விடுவித்து விட்டான்.
விடுவிக்கப்பட்ட அந்தப் பறவை சற்றுத்தூர அமர்ந்து.
நான் முதல் மூடன்
வேடன் இரண்டாவது மூடன்
அரசன் மூன்றாவது மூடன்
மந்திரி நான்காவது மூடன்
என்று உரக்க்க் கூறிவிட்டுத் தன்னுயிர் பிழைக்கப் பறந்துவிட்டது.
வலை இருப்பதை அறியாமல் மாட்டிக் கொண்டதால் தன்னையும். கைக்குக் கிட்டியதை அபூர்வ பொருளைத்தானே அனுபவிக்காமல் அரசனிடம் வலியச் சென்று தந்ததால் வேடனையும். அபூர்வத் தன்மையைப் பொறுத்திருந்து அறிய முயற்சிக்காமல் ஆராயாமல் அமைச்சரின் ஆலோசனையை கேட்டதால் அரசனையும். உண்மையை உணரமாட்டாமல் புத்திசாலி என்ற நினைப்புடன் அறிவுரை கூறியதால் மந்திரியையும்.
அப்பறவை மூடர்கள் என்று வரிசைப்படுத்திக் கூறியது. அரசனுக்கும் புரியவில்லை. அமைச்சனுக்கும் விளங்கவில்லை.

No comments:

Post a Comment