Tuesday, 11 February 2014

விண்டோஸ் 8.1 டிப்ஸ் & ட்ரிக்ஸ்

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1
விண்டோஸ் சிஸ்டமானது பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டு தற்பொழுது விண்டோஸ் 8 பதிப்பை எட்டியுள்ளது. விண்டோஸ் 8 பதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, முற்றிலும் வேறுபட்ட பயனர் இடைமுகத்தை கொண்டுவந்தது மைக்ரோசாப்ட்.
ஸ்டார்ட் பட்டன், டெஸ்க்டாப் ஸ்கிரீனையேப் பயன்படுத்தி பழகிய விண்டோஸ் பயனர்கள் திடீரென விண்டோஸ் 8-ன் புதிய மாற்றங்களை ஏற்றுகொள்ள முடியவில்லை. டெஸ்க்டாப் ஸ்கீரீனிற்குப் பதிலாக ஸ்டார்ட் ஸ்கிரீன் தோன்றுவதை ஒரு வித மிரட்சியுடன் உணர்ந்தார்கள்.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இதுபோன்று உள்ள சில குறைபாடுகளை நீக்கி மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு விண்டோஸ் 8.1 வெளிவர உள்ளது.

விண்டோஸ் 8.1 சிறப்பம்சங்கள்:(Features of Windows 8.1)
·         விண்டோஸ் 8.1ல் நீங்கள் Application-களை சிறிது நேரத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அது தானாகவே close ஆகி விடும்.
·         விண்டோவை க்ளோஸ் செய்வதற்கு நீங்கள் ஸ்கிரீனில் மேல் இருந்து கீழ் வரை Swipe செய்தால் போதுமாம்.
·         விண்டோஸ் 8ல் Cloud Service வசதி உள்ளது.
·         அதனால் இதனை பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் வைத்து லாக் இன் செய்தால் Microsoft Cloud Storage, E-mail போன்றவைகளை பயன்படுத்தலாம்.
·         உங்களுக்கு Privacy தேவை என்றால் விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்து ரைட் சைடு Swipe செய்து Settings -> Privacy Settings வைத்துக் கொள்ளலாம்.
·         மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 ஸ்டார்ட் பட்டனில் நிறைய புதிய அமைப்புகள் உள்ளது.
·         விண்டோஸ் 8.1ல் Modern Mode Altogether தவிர்த்துக் கொள்ளலாம்.
புதிய மேம்படுத்தல்கள்: (New Updates in Windows 8.1)
விண்டோஸ் 8 ல் வழக்கமாகப் பயன்படுத்தும் டெஸ்க்டாப் தொடக்கம் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்தது. வாடிக்கையாளர்கள் விண்டோஸ் சிஸ்டம் டெக்ஸ்டாப் ஸ்கிரீனிலேயே தொடங்க விருப்பட்டனர். மீண்டும் அந்த வசதியை விண்டோஸ் 8 ல் கொண்டு வந்துள்ளது மைக்ரோசாப்ட்.
இந்த வசதியைப் பெற ஒரு சிறிய அமைப்பைப் மேற்கொண்டு மாற்றம் செய்ய வேண்டும்.
·         அதற்கு உங்களுடைய டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்யுங்கள்.
·         கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
·         இங்கு காணப்படும் டேப்களில் when i sign in or close all apps on a screen, go to the desktop instead of Start என்பதை தேடிப்பெறவும்.
·         அதில் டிக் மார்க்கை ஏற்படுத்தவும்.
அவ்வளவுதான்.இனி, உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்காது.
விண்டோஸ் 8.1 ல் புரோகிராம்களை மாறா நிலையில் அமைக்க: (Set as Default Program)
நம் கம்ப்யூட்டர்களில், இன்டர்நெட் பிரௌசிங் செய்ய பல பிரவுசர்களை அமைக்கிறோம். ஆனால், நாம் ஏதேனும் ஓர் இணைய லிங்கில் கிளிக் செய்திடும்போது, மாறா நிலையில் (default) அமைத்திட்ட பிரவுசரில் தான் அது திறக்கப்படும்.
உதாரணமாக, நீங்கள் Chrome Browser –  திறந்து இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது,  இணையப் பக்கத்தில் உள்ள லிங்கில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மாறா நிலை பிரவுசராக செட் செய்யப்பட்டிருந்தால், அதில் தான் அந்த குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்படும்.
இதே போல் தான், நாம் பல மீடியா பிளேயர்கள் (Media Player), இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் (Email Client Progrom) ஆகியவற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிந்து வைத்து இயக்குகிறோம்.
இவற்றில், நமக்குப் பிடித்த புரோகிராமினை எப்படி மாறா நிலைக்குக் (Default)கொண்டு வந்து, அதில் திறக்கக் கூடிய புரோகிராம்களை, குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே திறக்கும்படி அமைப்பது.
இதனை விண்டோஸ் 8.1ல் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
·         முதலில் சார்ம்ஸ் பாரினைத் (Charms bar) திறக்கவும். (Shortcut ==>Win key + C )
·         Settings தேர்ந்தெடுங்கள்.
·         Change PC Settings தட்டுங்கள்.
·         Search and Apps கிளிக் செய்யுங்கள்.
·         Defaults என்ற வகையின் கீழ், நீங்கள் எந்த புரோகிராமினை Default Program ஆக மாற்ற விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திட முடியும்.
உதாரணமாக,
மீடியா பிளேயராக, Windows Media Player என்பதற்குப் பதிலாக, Media Player Classic என்பதனை மாறா நிலையில் அமைக்கலாம்.
இதே போல குறிப்பிட்ட பைல் வகைகளை எந்த புரோகிராமில் திறக்கலாம் என்பதனையும் அமைக்கலாம்.
விண்டோஸ் 8.1ல் இதனை புதிய PC Settings அப்ளிகேஷனிலேயே அமைக்க முடியும். முந்தைய விண்டோஸ் புதிப்பில் செயல்படுத்தியது போல கன்ட்ரோல் பேனல்  திறந்து மாற்றம் செய்ய வேண்டியதில்லை.

No comments:

Post a Comment