Thursday 10 April 2014

பொன்மொழிகள்-54





தனது தேசம் இழந்து போனதற்காகக் கவலைப்படும் மன்னனின் நிலைக்கும், தனது பொம்மை உடைந்ததற்காக வருத்தப்படும் குழந்தையின் நிலைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
******
ஒருவன் கடும் முயற்சியினால் உயர்ந்த மலையின் சிகரத்தை அடைந்து விடலாம்.ஆனால் அவன் அங்கேயே வாழ்ந்து விட முடியாது.
******
வெற்றிகரமாகப் பொய் சொல்ல வரம்பற்ற நினைவாற்றல் வேண்டும்.
******
கோபமான மனிதன் தனது வாயைத் திறந்து கண்களை மூடிக் கொள்கிறான்.
******
இளமை குறைகள் உடையது.
நடுத்தர வயது சிரமங்கள் உடையது.
முதுமை வருத்தங்கள் உடையது.
******
'
தான் மிக முக்கியமானவன்'என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி,''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்துவிடும்?''
******
வாழ்க்கை முழுவதும் இன்பமா!
அதைக் காட்டிலும் நரகம் எதுவும் இருக்க முடியாது.
******
நெற்றியைக் காயப்படுத்திக் கொள்வதைவிட
முதுகை வளைத்துச் செல்வது நல்லது.
******
நரி நம்புகிறது,''எல்லோரும் என்னைப்போல கோழியைப் பிடித்துத் தின்கிறார்கள்,''என்று.
******
நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் என்னைவிட ஏதாவது ஒரு வகையில் சிறந்தவனாக உள்ளான்.
******
பணிதல் நல்ல பண்புதான்.அதில்  ஒரு வரம்பைக் கையாளவில்லை என்றால் நீ அடிமையாவதற்கு அஸ்திவாரம் போடப்படும்.
******
ஒரு வாக்குவாதத்தின் உச்சத்தில் யார் அடிதடியில் இறந்குகிறார்களோ,அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று பொருள்.
******

No comments:

Post a Comment