Thursday 10 April 2014

பொன்மொழிகள்-53




நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வது என்பது ஒரு நல்ல குடையைப் போன்றது.ஆனால் அது நல்லதொரு கூரை இல்லை.
******
பணிவாக நடந்து கொள்வது,
மேலோரிடம் எனில்,அது கடமை.
சமமானவரிடம் என்றால் அது பண்பாடு.
கீழானவரிடம் என்றால் அது பெருந்தன்மை.
******
தொழிலில் மகிழ்ச்சி இருந்தால்
வேலையில் கச்சிதம்(perfection) தானே வரும்.
******
பிரச்சினைகள் என்பவை சிறு கற்கள் போன்றவை.
கண்ணின் அருகில் வைத்தால் நம்முடைய பார்வையை மறைத்துவிடும்.
தள்ளி வைத்துப் பார்த்தால் அவை எவ்வளவு சிறியவை என்பது புரியும்.
******
வெற்றி என்பது நிரந்தரம் அல்ல.தோல்வி என்பது இறுதியானது அல்ல.எனவே வெற்றி பெற்ற பின்னும் நம் பணியை நிறுத்தி விடக் கூடாது.தோல்வி அடைந்தாலும் முயற்சியைக் கைவிடக் கூடாது.
******
நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம்;
நாம் எப்போதுமே இன்றைக்கு விட நாளைக்கு நமக்கு அதிகமான நேரம் இருக்கிறது என்று நினைக்கிறோம்,நம்புகிறோம்.
***
***
கண்கள் இரண்டும் சேர்ந்தே இமைக்கின்றன;சேர்ந்தே பார்க்கின்றன.சேர்ந்தே அழுகின்றன.சேர்ந்தே தூங்குகின்றன.ஆனாலும் அவை ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வதில்லை.அதுதான் உண்மையான நட்பின் இலக்கணம்.
******
உலகின் மிகச்சிறிய சர்வாதிகாரமான வார்த்தை எது தெரியுமா?
'
அதெல்லாம் எனக்குத் தெரியாது.'
******
மூன்றுவித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
*
தன்னைப் பற்றிய பொறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் யார் கையிலாவது தன்னை ஒப்படைக்கக் காத்திருப்பவர்கள்.இவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
*
மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றி,தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவர்கள்.இவர்கள் மிருகத்தைப் போன்றவர்கள்.
*
தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் தாமாகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள்.இவர்கள்தான் மனிதர்கள்.
******

No comments:

Post a Comment