Thursday 10 April 2014

பொன்மொழிகள்-40




ஆரோக்கியம் வரி கட்டத் தேவையில்லாத செல்வம்.
******
நாம் பேசுவது விதைப்பதற்குச் சமம்.
கேட்பதோ அறுவடைக்கு சமம்.
******
உண்மையை மிதித்தால் அது உடனே வாளாக மாறிவிடும்.
******
சிரிப்பதற்காக செலவிடப்பட்ட நேரம்
கடவுளுடன் செலவிடப்பட்ட நேரமாகும்.
******
பத்து முறை வெற்றி பெறுவதைக் காட்டிலும்
ஒரு முறை சமாதானம் காண்பது மேல்.
******
புத்தகங்களும்,நண்பர்களும் குறைவாக இருந்தாலும்
நல்லவைகளாக இருக்கட்டும்.
******
எப்போதும் தோல்வியை தனியே பிரித்துப் பார்க்காதீர்கள்.
அது வெற்றியின் ஒரு அம்சம் என்பதை உணருங்கள்.
******
சிறிய மீன்களுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தால் அவை தங்களைத் திமிங்கலங்கள் என்று நினைத்துக் கொண்டு பேசத் துவங்கும்.
******
வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன்
தன பற்களாலேயே தனக்கு சவக்குழி தோண்டுபவன்.
******
கடைக்காரனிடம்  தவணைக்குப் பதில் சொல்லி அவமானப்படுவதை விட
உன் வயிற்றுக்குத் தவணை சொல்லி உணவைக் குறைத்துக் கொள்.
வாசலில் நல்ல வரவேற்பு இல்லாத விருந்துக்கு செல்வதை விட
பட்டினியாக இரு.
கசாப்புக் கடைக்காரனிடம் பல் இளிப்பதை விட 
மாமிசம் உண்பதைவிட்டுவிடு.
******
பிச்சை கேட்பது குற்றமல்ல.அது அறிவுப் பிச்சையாக இருக்கட்டும்.
தேடுவது குற்றமல்ல.அது புதிய கண்டு பிடிப்பாக இருக்கட்டும்.
மடிவது குற்றமல்ல.அது போர்க்களமாக இருக்கட்டும்.
******

No comments:

Post a Comment