Thursday 10 April 2014

பொன்மொழிகள்-33



கோபம் என்பது ஒரு விலை மிகுந்த தவிர்க்க முடியாத பொருள்.அந்தப் பொருளை செலவழிக்கும்போது மனிதர்களுக்குக் கிடைக்கும் ஒரே லாபம் மனதிருப்திதான்.
********
பிறர் மகிழ்ச்சியாக இருக்க எப்போது வழி கண்டு பிடித்துக் கொடுக்கிறீர்களோ அப்போது முதலே நீங்கள் இன்பமாக இருக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
********
என் குறைகளைக் கண்டு நானே உள்ளூரச் சிரித்துக் கொள்ளும்போது எனது மனச்சுமை குறைகிறது.
********
உழைப்பு எந்த மனிதனையும் ஏமாற்றுவதில்லை.
மனிதன்தான் உழைப்பை ஏமாற்றுகிறான்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலைதான் மனிதனைக் கொல்லும் .
********
உலகில் மிகச் சிறந்தவை எவை?உப்பின் ருசி,குழந்தையின் அன்பு,உணவின் மணம் .
********
விடைக்கு ஏற்றமாதிரி கேள்வியை மாற்றிக் கொள்ளுங்கள்.சமரசம் என்பது அதுதான்.
********
வாழ்வில்,
தென்னை மாதிரி வளர வேண்டும்:
நாணல் மாதிரி வளைய வேண்டும்.:
வாழை மாதிரி வாரி வழங்க வேண்டும்.
********
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முயற்சி செய்வதைக் காட்டிலும்
'
மகிழ்ச்சியாக நாங்கள் வாழ்கிறோம்,'என்று பிறர் நம்பும்படி செய்வதற்குத்தான் நம்மில் பலர் அதிக முயற்சி எடுத்துக் கொள்கிறோம்.
********
அறியாமல் இருப்பது தவறு அல்ல:
அறிய முயற்சி செய்யாமலிருப்பதே மாபெரும் தவறு.
********

No comments:

Post a Comment